அதிரையில் ப்ளாஸ்டிக் முட்டை பீதி எதிரொலி! கலெக்டர் நேரில் ஆய்வு!தஞ்சையில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

போலி முட்டைகள்

போலி முட்டைகள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரமோகன், மகேஷ், கவுதமன், கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார், கார்த்திக், வடிவேல், பாண்டி, உமாகேசன், செந்தில் ஆகியோர் கொண்ட குழுவினர் தஞ்சையில் உள்ள முட்டை விற்பனை செய்யும் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கடைகளில் ஆய்வு

தஞ்சை கீழவாசல், காவேரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட முட்டை விற்பனை நிலையங்களில் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் முழுவதும் போலி முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் யாரேனும் போலியான முட்டைகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவுகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.