மியான்மர்: விரட்டப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்மியான்மர் இராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது கட்டவிழத்துவிடும் கொடூரங்களில் இருந்து தப்பிக்க மியான்மரில் வாழ்ந்து வந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருத்து வெளியேறுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் மட்டும் ஏறத்தாள 10000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு செயற்கைக்கோள் படங்களை கொண்டு ஆய்வு செய்ததில் மியான்மரின் ரோஹிங்கிய கிராமங்கள் பெரிதளவு சேதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளது. ஆனால் தாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்று மியான்மர் இராணுவம் மறுத்து வருகிறது.
தங்களின் பாதுகாப்பிற்க்காக மியான்மரில் இருந்து அடைக்கலம் தேடி வரும் மக்களை ஏற்றுக்கொள்ளுமாறு ஐ.நா. பங்களாதேசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பங்களாதேஷ் அரசுடன் இணைந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தாங்கள் செய்வதாகவும் கூறியிருந்தது.

பங்களாதேஷ் அரசோ தங்களது எல்லைப்பகுதியில் பாதுகாப்பை அதிகரித்து ரோஹிங்கியா மக்கள் அங்கே வருவதை விட்டு தடுத்து வருகிறது. இது அல்லாமல் நாஃப் நதியில் உள்ள ஒரு தீவில் 3000 த்துக்கும் மேலான ரோஹிங்கியா மக்கள் இருப்பதாகவும் அங்கு அவர்களுக்கு போதுமான உணவு உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு எதுவும் இன்றி தவித்து வருவதாகவும் ரோஹிங்கியா தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த பகுதி பங்களாதேஷின் எல்லைக்கு குட்பட்டதல்ல என்பதனால் தங்களால் அதனை சரிபார்க்க முடியாது என்று பங்களாதேஷ் அரசு மறுத்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இன அழிப்பை செய்து வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டு மக்கள் அல்ல என்றும் அவர்கள் பங்களாதேஷ் வழியாக ஊடுருவியவர்கள் என்றும் கூறி அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க முனைந்து வருகிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தபப்டும் இந்தக் கொடுமைகளை தடுக்க நடப்பு தலைவரான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகவே உள்ளார். ரோஹிங்கியா முஸ்லிம்கள் அதிகாமாக உள்ள ராகைன் பகுதியில் பத்திரிகையாளர்கள் செல்லவதற்கும் சர்வதேச உதவிக் குழுக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.