மோடியே காரணம் ! வங்கி நெரிசல்…!!! தாயின் கையிலேயே மூச்சு திணறி இறந்த பிஞ்சு குழந்தை… கொடூரம் !பீகார்மாநிலத்தில், வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்று இருந்த போது, மூச்சுத் திணறி தாயின் கையிலேயே பிறந்து 32 நாள் ஆன பச்சிளங்குழந்தை இறந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பிரதமர் மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், அதன் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

வங்கியில்வரிசை

பீகார் மாநிலம், கத்தியார் மாவட்டம், பல்ராம்பூர் நகரைச் சேர்ந்தவர் அர்குணா காட்டூன். இவருக்கு அந்த நகரில் உள்ள யூனைடெட் பேங்க் ஆப் இந்தியா கிளையில் கணக்கு உள்ளது. வீட்டில் மளிகைப் பொருட்கள் இல்லாததால் அதை வாங்க பணம் எடுக்க தனது பிறந்த 32நாள் ஆன குழந்தையை தூக்கிக்கொண்டு ஏ.டி.எம். சென்றார். அங்கு பணம் இல்லை என்பதால், வங்கியில் எடுக்கச் சென்றார்.

வங்கியும் சிறிய கட்டிடத்தில் செயல்பட்டுவந்ததால்,  நீண்ட வரிசை ஏராளமான மக்கள் நின்று இருந்தனர். வெயிலும் கடுமையாக இருந்தது, காற்றோட்டம் இல்லாததால் பெரும் அவதியில் மக்கள் வரிசையில் நின்று இருந்தனர். அந்த கூட்டத்தில் அர்குணா காட்டூன் ஏறக்குறைய 1½மணிநேரம் தனது கைக்குழந்தையுடன் வியர்க்க, வியர்க்க நின்று பணம் பெற்று வெளியே வந்தார்.

மூச்சுத்திணறல்

அப்போது கையில் இருந்த தனது பிச்சிளங் குழந்தை அசைவின்றி இருப்பதைக் கண்டு அர்குணா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அந்த குழந்தையை பரிசோதித்த டாக்டர், அந்த குழந்தை மூச்சுத்திணறலால் இறந்து அரை மணிநேரம் ஆகிவிட்டது என்றார்.

வன்முறை

இந்த செய்தி கேட்டதும், வங்கியில் நின்று இருந்த மக்கள் வங்கியை அடித்து நொறுக்கி, பெரும் களேபரம் செய்தனர். அதன்பின் போலீசார் வந்து மக்களைக் கட்டுப்படுத்தினர். அங்கு வந்த துணைமேம்பாட்டு அதிகாரி பெரேஸ் அக்தர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.20 ஆயிரம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து கொடுத்தபின், கூட்டத்தினர் அமைதி அடைந்தனர்.


12 மணிநேரம்

இதேபோல, தார்பங்கா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த முகமது இலியாஸ் என்பவர் சிகிச்சைபலனின்றி மரணமடைந்தார். அவரின் உறவினர்கள் மருத்துவக்கட்டணத்தை பழைய ரூபாய் கொடுத்தபோது, அதை வாங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து, புதிய ரூபாயில் கட்டணத்தை செலுத்தாத வரை உடலை எடுக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தனர். இது குறித்த இறந்தவரின் உறவினர் போலிசில் புகார் செய்தனர். போலீஸ் துணை ஆணையர் தில்னாவாஸ் ஹசன் விசாரணை நடத்தியபின், 12 மணி நேரத்துக்குபின் இறந்தவர் உடல் மருத்துவமனையில் இருந்து உறவினர்கல் எடுத்துச் சென்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.