முத்துப்பேட்டை அருகே சாலையை பெயர்த்தெடுத்து நூதன போராட்டம்! பரபரப்பு..திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழப்பாண்டியில் நேற்று முன்தினம் புதிதாக தார்சாலை போடப்பட்டது. ஒன்றிய நிர்வாகம் சார்பில் பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 33.19 லட்சம் திட்ட மதிப்பீட்டில் போடப்பட்ட இந்த கீழப்பாண்டி -வேப்பஞ்சேரி தார்சாலை போதிய தரம் இல்லாமல் போடப்பட்டதால் பல இடங்களில் சாலையின் தாருடன் கூடிய ஜல்லிகள் பெயர்ந்து பல்லிளித்தது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியினர்.. அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதில் அதிகாரிகள் அலைசியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை தரமற்று போடப்பட்டிருந்த தார்சாலையை பெயர்த்தெடுத்து நூதன போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ஒன்றிய அதிகாரிகள் நூதன போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில்:
சாலை போடுகையில் ஒன்றிய பகுதி பொறியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் சிலர் உடனிருந்தனர். அதுவரையிலும் பணிகள் தரமாகவே நடந்தது. அவர்கள் அங்கிருந்து நகர்ந்த பிறகுதான் சாலைப்பணிகளில் குளறுபடி நடந்துள்ளது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூர சாலையில் சுமார் 30 மீட்டர் தூரசாலை தரமின்றி போடப்பட்டுவிட்டது. இதனையடுத்து ஒன்றிய அதிகாரிகள் மற்றும் இப்பகுதியினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தரமிற்றிருந்த சாலையை முழுமையாக செப்பனிட்டு தருவதாக சம்பந்தபட்ட ஒப்பந்தகாரர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.