தவ்ஹீத் ஜமாத் பாலமுனை கிளை அலுவலகம் தீ வைத்து எரிப்பு தவ்ஹீத் ஜமாத்தின் பாலமுனை கிளை நேற்றிரவு சுமார் 12.00 மணியளவில் காடையர் கும்பலினால் தீ வைத்து எறிக்கப் பட்டுள்ளது.

ஏகத்துவ, சத்தியக் கொள்கையை யாருக்கும் அஞ்சாமல் அல்லாஹ்வின் கட்டளைகளை அப்படியே ஏற்று நடந்து மற்றவர்களுக்கும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரத்தினை எதிர்கொள்ள முடியாத அசத்தியவாதிகள் எப்படியாவது ஏகத்துவக் கொள்கை பரவுவதை தடுக்க வேண்டும் என்பதற்க்காக இது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் நம்மை தாக்குவது, நமது அலுவலகங்களை தாக்குவது, அலுவலகங்களை தீ வைத்து எரிப்பதும் இது முதல் தடவையல்ல. சத்தியத்தை அழிக்க வேண்டுமென்ற கற்பனையில் இவர்கள் செய்யும் இக்காரியங்களினால் ஏகத்துவம் இன்னும் வீரியம் பெற்று வளருமே ஒழிய அழிந்து விடாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் இதற்க்கு முன்பும் பல ஊர்களில் நமது அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவை அனைத்தும் இன்று மக்கள் திரல் நிரம்பி வழியும் இடங்களாக மாறியுள்ளது.

இதே போல் ஓழைக் குடிசையாக இருந்த பாலமுனை கிளை இவர்களின் இந்த செயல்பாட்டினால் இன்னும் அதிகமான வளர்சியை அல்லாஹ்வின் அருளினால் பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதே நேரம், கிளைக் காரியாலயத்தை எரித்தவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கிளை நிர்வாகம் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாசகார வேலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.