தமிழகத்தின் புதிய ஆளுநர் பாஜகவின் சங்கர மூர்த்தி?தமிழகத்தின் புதிய ஆளுநராக கர்நாடக பாஜக தலைவர் சங்கர மூர்த்தி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றிய ரோசைய்யா ஓய்வு பெற்றார்.இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் ஆதிக்கத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தும் ஒரு நபர் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என பேச்சு அடிபட்டது.ஏற்கனவே எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்,தனது கட்சியை சேர்ந்த நபர்களை ஆளுநராக நியமித்து குடைச்சல் கொடுப்பது பாஜகவின் வழக்கமாக இருந்து வருகிறது.அதே நிலை தமிழகத்திற்கும் நேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றார் போலவே மகராஷ்டிர மாநில ஆளுநரான வித்யா சாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார்.பாஜகவின் மூத்த தலைவரான இவர்,தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பணியேற்றதும்,தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையே மாறியது.

இதனை தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி மாரடைப்பு காரணமாக ஜெயலலிதா காலமானார்.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள குழப்பான அரசியல் சூழலை தங்களது ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள மத்தியில் ஆளும் பாஜக என நினைப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே கூடிய விரைவில் வித்யா சாகர் ராவிற்கு பதிலாக,தமிழக அரசியல் குறித்து நன்கு அறிமுகம் உள்ளவரும்,கர்நாடக பாஜக மூத்த தலைவருமான சங்கர மூர்த்தி தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி மாநிலத்தில் பாஜவின் ஆதரவு பெற்ற ஆளுநர் கிரண்பேடி குடைச்சலை கொடுத்து வருவது போல,தமிழகத்திற்கு சங்கர மூர்த்தி ஆளுநராக நியமிக்கப்பட்டால்,அதிமுக அரசு பல பிரச்சனைகளை சந்திக்கும் என கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.