முத்தலாக் சட்டவிரோதமானது: அலஹாபாத் உயர் நீதிமன்றம்முத்தலாக் சட்டவிரோதமானது என்றும் முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்றும் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும் எந்த ஒரு தனியார் சட்டமும் இந்திய அரசியலமைப்பிற்கு மேலானதல்ல என்றும் அந்நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

“எந்த ஒரு சமூகத்தின் தனியார் சட்டமும் இந்திய அரசியல் சாசனம் ஒருவருக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கு மேலானது அல்ல.” என்று கூறிய அலஹாபாத் உயர் நீதிமன்றம் இது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருவதால் கூடுதலாக எதையும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த கருத்தை தெரிவித்துள்ள நீதிபதி சுனீத் குமார்,  இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார். மேலும் இது அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்தாகாது என்றும் இந்த கருத்து யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிகிறது.

முஸ்லிம் பெண்களை ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று கூறி விவாகரத்து செய்வதாகவும், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் வாயிலாக தலாக் கூறப்படுவதாகவும் கூறி அளிக்கப்பட புகாரை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் இதில் தலையிடுவது அந்த சமுதாயத்தின் அடிப்படை உரிமைகளை பாதிக்குமா என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பல ஆண்டுகளாக சங் பரிவார சக்திகள் எதிர்த்து வந்துள்ளன. மேலும் அனைவருக்கு பொதுவாக பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்றும் அவர்கள் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். இதனையடுத்து சில பெண்ணுரிமை இயக்கங்களும் முஸ்லிம் தனியார் சட்டவாரியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதோடு பலதார மனத்தை குற்றச்செயலாக கருத வேண்டும் என்றும் விவாகரத்து மற்றும் குழந்தை திருமணம் தொடர்பாக ஒரே சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் நிக்காஹ் ஹலாலா முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று வேறு வழியில் கூறி வருகின்றனர்.

இந்திய அரசியல் சாசனம் இஸ்லாமியர்களுக்கு தங்களின் திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகியவற்றை தங்களின் தனியார் சட்டத்தின் அடிப்படையில் நிர்வகித்துக்கொள்ள உரிமை வழங்கியுள்ளது. தங்களுக்கான இந்த உரிமைகள் அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியது என்றும் அதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என்றும் நாடுமுழுவதும் உள்ள முஸ்லிம் பெண்கள் கருத்து தெரிவித்து முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.