சவூதியில் வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்துசவூதியை பொருத்தவரை ஆண், பெண் கலப்பாக வேலை பார்க்க அனுமதியில்லை என்றாலும் பெண்களின் தனித்துவம் போற்றும் வேலையை பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஒரு சில வேலைகளை பெண்களால் மட்டுமே திறம்பட செய்யவும் முடியும்.

இந்நிலையில் சவுதி புள்ளியியல் துறை (General Authority of Statistics) வெளியிட்டுள்ள ஒப்பீட்டின் படி, வேலைக்கு போகும் பெண்களில் சுமார் 72,895 பேர் விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அதேவேளை வேலைக்குக் செல்லாத பெண்களில் சுமார் 14,856 பேர் மட்டுமே விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விவாகரத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக கணவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அழுத்தங்களுக்கு மேல் "தாங்கள் சம்பாதிக்கின்றோம்" என்ற மனநிலையுமே வேலை செய்யும் பெண்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பதன் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவாகரத்திற்கும் வேலைக்கும் முடிச்சுப் போடக்கூடாது என டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கியுள்ளோரின் வார்த்தைகள் புள்ளியியல் துறையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணமே வெளியாகியுள்ளது. அதில் பல டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள கருத்துச் சுருக்கம் யாதெனில், எங்களுக்கு கணவரை விட வேலையும், சம்பளமுமே முக்கியம்.

Sources: Al Riyadh / Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.