இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்.*பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்துவிடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்துவிடவோ உங்களால் முடியாது.*
                                                                                 (அல்குர்ஆன் : 17:37)
மக்களால் நான்.. ! ! !
மக்களுக்காகவே நான்.. ! ! !

எனக்கென்று யாருமில்லை என மேடைகளில் அவர் முழங்கியதை பொய்யென்று நிரூபித்திருக்கிறது இன்றைய தமிழகம்.

எதிர்க் கட்சிகளில் கூட தன்னை நேசிப்பவர்கள் அதிகம் என்று தெரிந்து கொள்ளாமலேயே போய்விட்டார்.

தன் இறப்பினில் கூட ஒரு மிகப்பெரிய உண்மையை விட்டுச் சென்றிருக்கிறார் #ஜெயலலிதா

என்ன தெரியுமா...?

*எவ்வளவு பணமிருந்தாலும், எத்துணை பெரிய பதவியில் இருந்தாலும்… பிள்ளைகளே.. பெற்றோர்களே.. மருமகள்களே.. மாமியார்களே.. அண்ணன் தம்பிகளே.. அக்கா தங்கைகளே.. அத்தை மாமாக்களே.. சித்தி சித்தப்பாக்களே.. தம்பி தங்கைகளே.. இன்னும் மீதமிருக்கும் அனைத்து உறவுகளே ஓடுங்கள்….*

ஏதாவதொரு காரணத்தால் பிரிந்திருக்கும் உங்கள் இரத்த உறவுகளை நோக்கி ஓடுங்கள்.

இருக்கும் காலத்திற்குள் பகையழித்து இணைந்து வாழுங்கள். உறவின் வலிமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனென்றால்.. தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று வாழ்ந்து காட்டிய ஜெயலலிதா...

உறவுகள் உடனில்லாத காரணத்தால் தனது கடைசி 75 நாட்களை என்னவென்று கூட அறிய முடியவில்லை.

உண்மையான அன்பின் கண்ணீர் ஒரு சொட்டுக் கூட இவர் உடலின் மேல் விழவில்லை. தரையில்தான் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.

உங்களுக்கும் இந்நிலை வேண்டாம். உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உயிர் காக்க மட்டுமல்ல.. உயிர் உணர்த்தவும் இரத்த உறவுகள் தேவை.

இதுதான் கடைசியாய் இவரிடம் கற்ற பாடம்.

 இறுதியாய் சொல்ல வைத்  தாயே  அம்மா என்று!
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.