அதிமுகவை யாரும் வீழ்த்தவும் திருடவும் முடியாது - நடராஜன் - அம்மாவின் விசுவாசிகளே உசார்! வீடியோஅதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது.. திருடவும் முடியாது: சசிகலா கணவர் நடராஜன் பரபரப்பு

ஆசீர்வாதம் ஆச்சாரி
இப்பேட்டியளித்த போது பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் சீடரான ஆசீர்வாதம் ஆச்சாரி ம. நடராஜனுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது என ம. நடராஜன் கூறியுள்ளார்.

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது... தனிநபர் கட்சியை திருடவும் முடியாது என்று ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே சசிகலா கணவர் ம. நடராஜன் பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவரை இழந்த சோகத்தில் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளன.

ஆனால் அதிமுகவின் அதிகார மையங்களோ அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிவிட்டன. எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு சசிகலா நடராஜன் அளித்த 'எக்ஸ்குளூசிவ்' பேட்டியில் கூறியுள்ளதாவது:

அதிமுக தொடரும்...
அதிமுகவில் வெற்றிடமே இல்லை. புரட்சித் தலைவரின் புகழும் புரட்சித் தலை அம்மாவின் புகழும் இருக்கும் வகையில் அண்ணா திமுக தொடரும். புரட்சித் தலைவரின் இரட்டை இலையும் புரட்சித் தலைவி அம்மாவுடைய உழைப்பும் இருக்கும் வரை அதிமுக தொடரும்.

தீர்மானித்தது நாங்க...
நாங்க வந்து இதே இடத்தில் புரட்சித் தலைவரை அடக்கம் செய்தபோது யார் அடுத்த தலைவர் அப்படிங்கிறதை தேர்வு செய்யுறதல மிக முக்கியமான தலைவர்கள்... அவங்க பேர்ல எல்லாம் சொன்னா லேட்டாகும் வெவ்வேற இடத்துல இருக்காங்க.. அந்த தலைவர்கள் எல்லாம் சேர்ந்து... இந்த கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய தகுதி தாய்ந்தவர் யார்? என்று தீர்மானிக்கிற இடத்துல நாங்க எல்லாம் அப்ப இருந்தோம்...

ஜெ.தான் என்றோம்...
அப்போது 25 வருடத்துக்கு அதிமுக என்ற புரட்சித் தலைவருடைய அந்த தீபத்தை ஒளிவிளக்கை ஏந்தும் தகுதி ஒரே ஒருவர் புரட்சித் தலைவி அவர்கள்தான் என்று நாங்கள் அப்போது முடிவு செய்தோம்.

தனிநபர் திருட முடியாது...
அதைவிட தாண்டி 28 ஆண்டுகாலம் இந்த கட்சியை வழிநடத்தி எம்ஜிஆர் உருவாக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுவந்துவிட்டார். இப்போது திராவிட இயக்க ஆட்சியும் 50 ஆண்டுகாலம் நிறைவு பெறும் கட்டத்தில் உள்ளது. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், புரட்சித் தலைவி என்கிற 4 பேரின் சகாப்தம் என்றும் தொடரும். புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,. புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் போட்ட விதையை எந்த ஒரு தனிநபராலும் திருடிவிட முடியாது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.