துபாய் தொழிலாளர் குடியிருப்பில் தொழிலாளர்களை சந்தித்த கேரளா முதல்வர்!துபாய்க்கு அரசுமுறை பயணமாக வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசுமுறை சந்திப்புக்கள் இன்று (வியாழன்) அதிகாரபூர்வமாக துவங்கவுள்ள நிலையில், நேற்று மாலை (புதன்) துபை வந்தடைந்த கேரள முதல்வர் தனது முன்கூட்டியே அறிவிக்காத (Surprise) பயணமாக, துபை அல்கோஸ் பகுதிகளிலுள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கு நேரில் விஜயம் செய்து கேரள தொழிலாளர்களை சந்தித்து உரையாடினார், அப்போது பிற இந்திய தொழிலாளர்கள் உட்பட வெளிநாட்டினரும் பெருமளவில் ஆச்சரிய விழிகளுடன் குழுமியிருந்தனர்.

கேரள தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் விஜயன், துபை வாழ் அனைத்து கேரள தொழிலாளர்களையும் சந்திக்க முடியாத நிலையிலுள்ளதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், கேரளாவின் முதுகெலும்பாய் திகழும் அன்னிய செலாவணி வருவாயை ஈட்டித்தரும் உங்களுக்கு பிரதியுபகாரமாக கண்டிப்பாக கேரள அரசு பல நலத்திட்டங்களை விரைவில் அறிமுகப்படுத்தும் என உறுதியளித்தார் என்றாலும் அனைத்து தொழிலாளர்களும் மோடியின் செல்லாக்காசு திட்டத்தால் தாங்கள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்தை கூட அத்தியவசிய குடும்ப செலவிற்கு எடுக்க முடியவில்லை என்ற குறையை தெரிவித்தனர்.

மலையாளிகளுக்கு அடுத்து அதிகளவில் தமிழர்களே வளைகுடா நாடுகளில் வசித்து வரும் நிலையில் நம்மையும் நேரில் தமிழக முதல்வர்கள்? வந்து காணும் அதிசயம் தற்போதைய சூழலில் கனவில் மட்டுமே சாத்தியம்.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.