முத்துப்பேட்டை பள்ளியில் சத்துணவில் பிளாஸ்டிக் முட்டை கல்வி அதிகாரிகள் விசாரணைமுத்துப்பேட்டையில் பள்ளி சத்துணவில் பிளாஸ்டிக் முட்டை வழங்கப்பட்டதாக எழுந்த புகார் பற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குதெரு அருகே உள்ள  மதியலங்கார அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 10ம் தேதி மதிய உணவோடு வழங்கப்பட்ட முட்டையில் சில பிளாஸ்டிக் முட்டைகளும் வழங்கப்பட்டதாக  கூறப்படுகிறது.

மாணவர்கள் முட்டையை சாப்பிடும்போது  லப்பரை மெல்வது போன்றும், முட்டை சற்று வித்தியாசம் கண்டறிய முடியாத வகையில் இருந்தால்  முட்டையை மாணவர்கள் சிலர் வீட்டுக்கு எடுத்து சென்றனர். அதே பள்ளியில் படிக்கும் யாக்கூப் என்பவரது மகளும் முட்டையோடு வீட்டுக்கு சென்றார். அந்த முட்டை பிளாஸ்டிக் போல் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து சிலர்  முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் பள்ளியில் வழங்கப்பட்ட முட்டை சீனாவில் தயாரிக்கப்பட்ட முட்டையாக இருக்குமோ என்று பெற்றோர்,  பொதுமக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கடந்த 11ம் தேதி தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பார்வதி, அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவிதிட்ட அலுவலர் சங்கரநாராயணன், முத்துப்பேட்டை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன் ஆகியோர் சம்பந்தப்பட்ட மதியலங்கார அரசு தொடக்கபள்ளிக்கு சென்று சத்துணவு அமைப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.