முத்துப்பேட்டை அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு சொகுசு பஸ்முத்துப்பேட்டை அருகே 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ் வாய்க்காலில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வழியாக நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு சொகுசு பஸ் நேற்று அதிகாலை எடையூர் சங்கேந்தி நத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட ஒதுங்கிய போது நிலைதடுமாறிய பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் இறங்கியது.

இதில் பஸ்சில் இருந்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் காயமின்றி  தப்பினர். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீட்பு வாகன உதவியுடன் பல மணி நேரம் போராடி பஸ்சை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.