முத்துப்பேட்டை அருகே பயங்கர மோதல் ஒருவருக்கு துப்பாக்கி சூடு பலருக்கு அறிவால் வெட்டு போலீஸ் குவிப்பு பதற்றம்முத்துப்பேட்டை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கி கள்ள துப்பாக்கியா  உரிமம் பெற்ற துப்பாக்கியா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

தண்ணீர் பாய்ச்ச எதிர்ப்பு
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யாறு (வயது52). இவருக்கு அதே பகுதியில் உள்ள ஏரிப்புறக்கரையில் வயல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் வராததாலும், மழை பெய்யாததாலும் இவரது வயலில் வளர்ந்திருந்த பயிர்கள் வாடின. நீரின்றி வாடும் பயிர்களுக்கு அருகே இருந்த தம்பிக்கோட்டை ஏரியில் இருந்து தண்ணீர் பாய்ச்ச அய்யாறு தரப்பினர் முயன்றனர். இதற்கு அந்த ஏரியை குத்தகைக்கு எடுத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (45) (விவசாயி) தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கியால் சுட்டார்
இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியால் அய்யாறு தரப்பினரை நோக்கி சுட்டதாக தெரிகிறது. இதில் அய்யாறு, திருச்சிற்றம்பலம் மகன் சத்தியராஜ் (30) ஆகியோர் காயமடைந்தனர். மேலும் ரவிச்சந்திரனுடன் வந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில் அய்யாறு தரப்பை சேர்ந்த அவருடைய தம்பி அண்ணாதுரை (48) மற்றும் திருமுருகன் என்ற செல்வேந்திரன் (36) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக 4 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் குவிப்பு
இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ரவிச்சந்திரன் முத்துப்பேட்டை போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிச்சந்திரன் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் பெற்றது என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கியையும், தோட்டாக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.