திட்டமிட்டபடி நாளை அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு..!



தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் எனப் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7ஆம்தேதியும், பத்தாம் வகுப்புக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றும் இன்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு நடைபெற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அந்தத் தேர்வு பின்னர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நாளை தொடங்கவுள்ள பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது…
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.