துருக்கியில் ரஷ்யத் தூதர் படுகொலை யோசிக்கவேண்டிய விஷயம் வீடியோ இணைப்புசந்தோசம் இருந்தாலும். யோசிக்க வைக்கிறது !!

நாடுகளுக்கு மத்தியில் இணைப்புப் பாலமாக திகழ்வது தூதரகங்கள். அந்த தூதரகத்தின் தூதராக பணிபுரிபவரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். தமக்கு தேவையில்லை எனில் தூதரக உறவை முறித்துக் கொள்வதும், தூதரை வெளியேற்றுவதும் நியாயமானதாகும்.

அதேநேரத்தில் அந்த தூதரை துன்புறுத்துவதோ கொலை செய்வதோ தடுக்கப்பட்டதாகும். அறியாமைக் காலத்தில் கடும் பகை நிலவிய காலத்தில் கூட பெரும்பாலும் தூதர்கள் கண்ணியப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

அந்த வகையில் நேற்று துருக்கி நாட்டிற்கான ரஷ்யத் தூதரை ஒரு துருக்கி காவலர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குரியது. சிரியாவில் அப்பாவி மக்களை கொன்று குவிப்பதில் ரஷ்யாவின் பங்கு அதிகமானது என்றாலும் நமது கோபம் ரஷ்யா ஆட்சியாளர் மீதுதான் இருக்கவேண்டுமே தவிர, நமது நாட்டில் அடைக்கலமாகியுள்ள ஓரு அப்பாவி பணியாளர் மீது இருக்ககூடாது. ரஷ்யா ஆட்சியாளர் செய்யும் தவறுக்கு இந்த தூதர் பொறுப்பாக மாட்டார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தனது இறுதிப் பிரகடனத்தில், "தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ, பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது' என்றார்களே! இதன் அர்த்தம்தான் ஒரு பக்கம்  சந்தோசம் வந்தாலும் யோசிக்க வைக்கிறது.

மேலும் இறைவன் தன் அருள்மறையில்,

(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
(அல்குர்ஆன் : 17:33)

என்று கூறியுள்ளானே!

எனவே ஒரு முஸ்லிம் எப்போதும் நியாயத்தை மறந்துவிடலாகாது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.