மியான்மார் இராணுவம் எனது ஏழு குழந்தைகளையும் கொன்றது - ஒரு அகதியின் கதறல்மியான்மார் - ரோஹிங்கியாவில் முஸ்லிமாகப் பிறந்த நூர் ஆயிஷா தனது கடைசி ஒரு மகளுடன் படகு வழியாக வந்து வங்க தேசத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மியான்மார் இராணுவம் அவரது கிராமத்திற்குள் வந்த சம்பவத்தை விபரிக்கையில், “இருபதுக்கும் அதிகமான இராணுவத்தினர் எங்களது வீட்டிற்கு முன்னால் வந்து அனைவரையும் வீட்டு முற்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டனர்.

எனது ஐந்து குழந்தைகளை ஒரு அறையில் தள்ளி தாழ்ப்பாளிட்டனர். அந்த அறையை குண்டால் வெடிக்கச் செய்து என்னுடைய ஐந்து குழந்தைகளையும் உயிரோடு எரித்துவிட்டனர். எனது இரண்டு பெண் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

எனது கணவனை கொன்றதுடன் என்னையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினர். எனது ஐந்து வயது குழந்தை அருகிலிருந்த வீட்டில் மறைந்திருந்ததால் அவள் மட்டும் காப்பாற்றப்பட்டாள் எனக் கூறினாள்.

இந்த சம்பவம் பர்மாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ரக்ஹைன் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. குறித்த பெண் அம்மாநிலத்தில் உள்ள கியெட் யோ பியன் பகுதியைச் சேர்ந்தவர்.

மியான்மாரை ராணுவ ஆட்சியிலிருந்து மீட்டவராக பார்க்கப்படும் ஆங் சென் சூகி தற்போதைய அரசாங்கத்தில் வெளி விவகாரத்துறை அமைச்சராக இருக்கும் நிலையிலும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் ராணுவ வன்முறைகளைக் கண்டு கொள்ளாதவராக செயல்பட்டு வருகிறார்.

“ரோஹிங்கா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறையால் ஆங் சென் சூகியின் நோபல் பரிசை திரும்ப பெற வேண்டும்” என்ற குரல்களும் வலுத்திருக்கின்றன.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான பாலியல் வன்முறைகளை ஐக்கிய நாடுகள் சபை இன ரீதியாக தூண்டப்படும் வன்முறைகளாக சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால் இப்படியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மியான்மார் அரசாங்கம் மறுத்து வருகிறது.

பெருமளவிலான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசம், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் புக முயற்சிப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.