சில ஊடகங்களின் காழ்ப்புணர்வா? விஜயா காந் கூறியது உண்மையே!ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல இடங்களில் இருந்தும் எத்தனையோ விஐபிகள் வந்திருந்தனர்.

முன்னாள் தமிழகத்தின் கவர்னர் பாத்திமா பீவி அவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார். நான் அதனை பார்த்தேன். ஆனால் ஒரு மீடியா கூட பெயரை உச்சரிக்கவில்லை. நானும் இன்று வரை எதிர் பார்த்தேன். ம்ஹூம்.

இந்தியாவின் சுப்ரிம் கோர்ட் முதல் பெண் தலைமை நீதிபதி அவர்கள் பாத்திமா பீவி அவர்கள். அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தமிழக கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது. அவ்வளவு சாதாரணமா இவர்களுக்கு ஆகிவிட்டது. அவர்கள் பெயரை உச்சரிக்க கூட முடியவில்லை. இதுவெல்லாம் காழ்ப்புணர்வின் உச்சம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

ஒரே ஒரு அரசியல் நிகழ்வை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். யாரும், எந்த மீடியாவும் பேசாததால் இந்த நினைவூட்டல்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாமல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நேரத்தில் அதிமுக மிகப் பெரிய வெற்றி அடைந்த பொழுது ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னராக இருந்த பாத்திமா பீவி அவர்கள். அப்பொழுது எதிர்கட்சியாக இருந்தவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தார்கள். அதனால் பாத்திமா பீவி அவர்களை திரும்ப பெற வலியுறுத்தினர். நீங்கள் என்ன என்னை திரும்ப பெறுவது நானே ராஜினாமா செய்கிறேன். சட்டத்திற்கு உட்பட்டுதான் ஜெயலிதாவை ஆட்சி அமைக்க அழைத்தேன். ஒரு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எனக்கு யாரும் சட்டம் சொல்லித் தர வேண்டாம் எனக் கூறிவிட்டு பதவியை ராஜினாமா செய்தவர்தான் பாத்திமா பீவி அவர்கள்.

இந்த தருணத்தில் இதனை நினைவூட்டாமல் விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த பதிவு. யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல.

தமிழகத்தின் முதல் பெண் ஆளுனர் பாத்திமா பீவி அவர்கள் (1997-2001).
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.