இவன்களின் ஈனச் செயல் எந்த அளவிற்கு உள்ளது என்று பாருங்கள்..!தமிழக மக்கள் முதலமைச்சரின் துக்கத்தை அனுசரிக்கும் இவ் வேளையில்... இவன்களின் ஈனச் செயல் எந்த அளவிற்கு உள்ளது என்று பாருங்கள்..!
காவி தீவிரவாத கும்பலின் சதிகள் அம்பலத்திற்கு வரும் காலம் மிக அருகில் உள்ளது
தமிழக மக்கள்  காவி தீவிரவாத கும்பலின்
சூழ்ச்சிகளுக்கு   ஆளாகிவிடாமல்  சிந்தித்து செயல் படும் நேரமிது


பாஜக ஒரு அருவெறுக்கத்தக்க கட்சி. அதில் உள்ளவர்கள் பிணங்களை மேயும் புழுக்களுக்கு ஒப்பானவர்கள். அதற்கு ஒரே சான்று நேற்றில் இருந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், "இதுதான் தமிழகத்தில் பிஜேபி நுழைய சரியான சமயம்," என்று வாயில் எச்சில் வடிய எழுப்பும் தொடர் கோஷம்.

திமுகவும், அதிமுகவும் அரசியல் களத்தில் நேர் எதிரிகள். ஆனால் ஒருபோதும் கலைஞர் நோயுற்று இருக்கும்போது அதிமுகவினரோ, ஜெ ஜெயிலில் இருக்கும்போது திமுகவினரோ, "இதுதான் நல்ல சமயம்," எனப் பேசவோ எழுதவோ இல்லை. என்னதான் தமிழக தலைமைகள் நேருக்கு நேர் உரையாடுவதில்லை என்றாலும் அரசியல் நாகரீகமும், மனிதாபிமானமும் ஒரு இயல்பான கலாச்சாரமாக இருந்துகொண்டே தான் இருக்கிறது.

ஆனால் முதல்முறையாக ஒரு தலைவர் இறந்து, அவர் நல்லடக்கம் செய்யப்படுவதற்குள், "இழவு வீட்டில் நுழைந்து திருட இதுவே நல்ல சமயம்," என மரணத்திற்காகவே காத்திருக்கும் சவப்பெட்டிகளைப் போல பாஜகவினர் வெளிப்படையாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். ரங்கராஜ் பாண்டேவின் அவசரக்குடுக்கைத் தனமும் இப்படியான ஒரு நப்பாசையில் விளைந்ததே என உறுதிபடச் சொல்ல முடியும்.

இதுபோன்றதொரு கேவலமான அரசியல் உலகில் எங்காவது இருக்குமா? இவ்வளவு வெளிப்படையாக தாங்கள் பிணந்தின்னிகள் என யாராவது வெட்கமேயில்லாமல் காட்டிக் கொள்வார்களா? ஆனால் பிணங்களின் மீதும் கலவரங்களின் மீதும் மட்டுமே அரசியல் நடத்தி அரியணை ஏறிய பாஜகவிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

தமிழக மக்கள் மிகவும் தெளிவானவர்கள். இந்தியாவே மோடி எனும் பெரும்பொய்யை நம்பி பேராசையில் பல்லிளித்த போதும் அதற்கு செவி சாய்க்காமல் இருந்தவர்கள். எப்படி ஒப்பிட்டாலும் தமிழகம் பிற மாநிலங்களைவிட எல்லா வகைகளிலும் முன்னேறி இருப்பதற்கு காரணம் திமுகவும், அதிமுகவும் என்பதை அறிந்தே இருப்பதனால்தான், "தமிழகத்தில் மாற்று தேவை" என்ற பொய்யை மீண்டும் மீண்டும் மீண்டும் வலுவாக புறக்கணித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல், சோர்ந்து அமர்ந்திருந்த ஓபிஎஸ்சின் கையைப் பிடித்து ஸ்டாலின் ஆறுதல் சொன்ன அந்தக் காட்சிதான் தமிழக மக்களின் மனதில் நம்பிக்கையாக விதைக்கப்பட்டிருக்கிறது. கேள்விக்குறியாக வளைந்திருந்த தமிழகத்தின் வருங்காலத்தை ஒரே நொடியில் ஆச்சரியக்குறியாக நிமிர்த்தி இருக்கிறது. அந்த ஒரு காட்சி போதும் தமிழகத்தின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும் என்பதை எடுத்துரைக்க.
அவ்வளவு துக்கத்திலும் அப்போது எழுந்த மக்களின் ஆராவாரம் தான் பாஜக போன்ற கழுதைபுலிகளுக்கான மக்களின் பதில்.

இறுதியாக ஒன்று. ஜெவும், கலைஞரும் இருந்தாலும் இல்லையென்றாலும் சிங்கங்கள். பாஜககாரர்கள் பத்து லட்ச ரூபாய்க்கு கோட்டு போட்டு பந்தாவாக வலம் வந்தாலும் வெறும் கழுதைப்புலிகள்தான். இது இந்தியாவில் யாருக்குத் தெரிகிறதோ தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். எக்காலத்திலும் பாஜகவுக்கு மீந்ததைத் தருவார்களே தவிர தங்களையே தர மாட்டார்கள். பாஜக இன்னும் ஏழேழு பிறவிகள் எடுத்து எவ்வளவு முயன்றாலும் அதற்கு இடம் தமிழகக் கதவுகளுக்கு வெளியேதான்.

ஏனெனில் தமிழக மக்கள் தங்களுக்காக வேட்டையாடித் தரும் தலைவனைத்தான் தேர்ந்தெடுப்பார்களே தவிர, தங்களையே வேட்டையாடக் காத்திருக்கும் கழுதைப் புலிகளை அல்ல!

-டான் அசோக்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.