இந்து மத வேதநூல்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி..... உள்ள குறிப்புகள்இந்து மத வேதங்களில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களை பற்றி முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

மஹாமத் என்ற பெயரில் பாலைவன பகுதியில் ஒருவர் வருவார் என்றும் அவர்களின் தந்தை பெயர், தாயின் பெயர், குண நலன்கள் என எல்லாமே குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் தோழர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்)."
(பவிஷ்ய புராணம் - பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-7)


”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (பாங்கு) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்”
(பவிஷ்ய புராணம், 3:3:25)

'அனைத்து கல்வியறிவின் ஊற்றுக் கண்ணான ‘அஹ்மத்’ ஒரு மகத்தான மனிதராகும். இவர் ஒரு சூரியப் பிரகாசத்தை போல இருளை விரட்டக் கூடியவர். அந்த பிரகாசமிக்க பேரொளியை அறிந்து கொண்ட பின்னரே மரணத்தை வெல்ல வேறு வழி கிடையாது.’
யஜூர் வேதம் 18-31.

"உண்மையாளரும் அறிவாளியும் பலசாளியுமான மாமஹே (அதாவது முஹம்மத்) எனக்கு அருள் புரிவார். அவர் முழுமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர்.”
 (ஆதாரம் ரிக் வேதம் மந்திரம் 5 , சூக்தம் 28 )

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்களை பற்றி மேலே எவ்வளவு தெளிவாக வேதங்கள் கூறி உள்ளன என பாருங்கள்.

சர்வ உலகிற்கும் அருளாகவும் நேர்வழி காட்டுபவராகவும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்
அன்னவர்கள் வந்துள்ளதையும் விக்கிரக ஆராதனை, மூட நம்பிக்கைகள், தீய பழக்கவழக்கங்கள் போன்ற இருளை விரட்டி நேர்வழி என்னும் சூரிய பிரகாசத்தை பரப்ப வந்தவர்கள் என்பதை இந்த வசனம் எடுத்து காட்டுகிறது.

அடுத்து இந்து வேதங்களில் புகழ் பெற்ற பகவத் கீதையில் கல்கி அவதாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கலியுகத்தில் (இறுதி காலத்தில்) ஒரு கல்கி அவதரிப்பார் என்றும் அவரின் குண நலன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களையே குறிக்கும் என்பதை சரியாக முழுமையாக ஆய்வு செய்து பார்த்தால் புரியும்..

 பகவத் புராணம் காண்டம் 12, அத்தியாயம் 02, ஸ்லோகம் 18-20.படி

ஷம்பாலா நகரின் தலைவர் விஷ்னுயாஷ் என்பவர் வீட்டில் அவர் பிறப்பார் என்று
கூறப்பட்டுள்ளது.
அவருடை பெயர் கல்கி என்பதாகும்.

அவருக்கு எட்டு (08) தெய்வீக அம்சங்கள் இருக்கும் என்கிறது.

அவர் குதிரையின் மீது வலது கையில் வாலை ஏந்தியவராக வருவார் என்றும் கொடியவர்களை அழிப்பார் என்றும் காணப்படுகிறது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்கள் வாளை ஏந்தி யுத்தம் செய்து கொடியவர்களை அழித்தமை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.

 மேலும் பகவத் புராணம் காண்டம் 01, அத்தியாயம் 03, ஸ்லோகம் 25 படி

கலியுகத்தில் மன்னர்களெல்லாம் கொள்ளையர்களாக மாறுகின்ற தருணத்தில் விஷ்னுயாஷின் வீட்டில் கல்கி பிறப்பார் என்று சொல்கிறது.

 கல்கி புராணம் அத்தியாயம் 02, வசனம் 04ல்

அவரின் தந்தையின் பெயர் விஷ்னுயாஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஷ்னுயாஷ் என்றால் இறைவனை வணங்குபவர், இறைவனின் அடிமை என பொருள்படும். இதன் அரபி மொழிபெயர்ப்பு அப்துல்லாஹ்.

இதுவே  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களின் தந்தையாரின் பெயராகும்.

 கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 05ல்

கல்கிக்கு நான்கு தோழர்கள் உதவியாக இருப்பார்கள் என குறிப்படுகிறது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களுக்கும் நான்கு தோழர்கள், அதாவது அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ஆகிய நான்கு தோழர்கள் உதவியாளர்களாக இருந்தனர்.

அவர்கள் கலிபா என்று அழைக்கப்பட்டனர். அதாவது பிரதிநிதி எனப்பொருள்படும்.

 கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 07ல்

அவருக்கு யுத்த களத்தில் வானவர்கள் உதவி செய்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றின் முதல் யுத்தமான பத்ர் யுத்தத்தில் முஸ்லிம்கள் வெறும் 313 பேர் மட்டுமே இருந்தனர்.

இறை நிராகரிப்பாளர்கள் 1000 பேர் சகலவிதமான யுத்த தளபாடங்கள், ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

அப்போது இறைவன் வானவர்களை அனுப்பி முஸ்லிம்களுக்கு உதவி செய்தான்.

 கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 11ல்

அவர் விஷ்னுயாஷின் வீட்டில் சுமதியின் வயிற்றிலிருந்து பிறப்பார்.

சுமதி என்றால் அமைதி என்று பொருள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களின் தாயின் பெயர் ஆமினா. இதுவும் அதே அர்த்தத்தையே கொடுக்கிறது.

கல்கி புராணம், அத்தியாயம் 02, வசனம் 15ல்

அவர் மாதோ மாதத்தில் 12ம் நாள் பிறப்பார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களும் ரபியுல் அவ்வல் மாதம்

(இது அரபி மாதமாகும்.
வசந்தத்தின் ஆரம்பம் என பொருள்படும்) 12ம் நாள் பிறந்தார்கள்.

இப்படி நிறையவே சொல்லி கொண்டு போகலாம்.

ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவ்வளவு ஆதாரங்களே போதுமானது.

உண்மையான இந்து யார்?

மேலே பார்த்த இந்து மத வேத வசனங்கள், ஓரிறை கொள்கையையும் இறைவனை அன்றி வேறு யாரையும் வணங்க கூடாது என்பதையும் இறைவன் உருவமோ உடலோ அற்றவன் என்பதையும் அந்த இறைவனை சிலையாக கற்பித்து வணங்கக்கூடாது என்பதையும் மிக தெளிவாக சொல்லி காட்டியுள்ளது.

அதேபோல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அன்னவர்களின் வருகை (கல்கி அவதாரம்) பற்றியும் குறிப்பிட்டுள்ளது.

தூய உள்ளத்தோடும் தெளிவான சிந்தனையோடும் ஒரு இந்து சகோதரர் உண்மையை விளங்கி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமர்ந்து இந்த வேத வசனங்களை சரி வர படித்தாலே போதுமானது.

நிச்சயமாக அவரினால் இஸ்லாமிய ஓரிறை கொள்கை கோட்பாடுகளை விளங்கி கொள்ள முடியும்.

 அவர் தன் இந்து மத வேதங்கள் தடுத்தபடி சிலைகளை வணங்குதல், படைப்புகளை வணங்குதல் போன்றவற்றை கைவிட வேண்டும்.

சர்வ வல்லமையும் மிக்க ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், முஸ்லிம்களை போல.

எனவே, இன்னும் காலம் கடந்து விடவில்லை.

இந்து சகோதரர்கள் ஒவ்வொருவரும் இந்த சத்தியங்களை எல்லாம் நன்று விளங்கி, உண்மையான சத்தியத்தை நோக்கிய இஸ்லாம் என்னும் இந்த நேர் வழி மார்க்கத்திற்கு வர வேண்டும்.

இல்லையேல், இந்து வேதங்கள் முன்னறிவிப்பு செய்த அந்த சத்திய தூதரையும் (கல்கி) சத்திய மார்க்கத்தையும் தவற விட்டு கைச்சேதப்பட வேண்டி வரும்.

இன்ஷா அல்லாஹ்...

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.