அதிரையில் சாலை விபத்து: ராஜிக் அஹமது மரணம்அதிரை CMP-லேன் சேர்ந்தவர்
முஹம்மது பாருக் இவரது மகன் ராஜிக் அகமது எலெக்ட்ரிசியனாக இருந்து வந்தார்.

இன்று (12-12-2016) காலை இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ரிச்வே கார்டன் உணவகம் அருகே வந்த போது அதே சாலையில் வந்த திருவாரூரைச் சேர்ந்த கார் ராஜிக் அகமது மீது பலமாக மோதியது. இதில் ராஜிக் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்


பின்னர் உடல் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை நாளை (13-12-2016) தள்ளிவைக்கப்பட்டது .தற்போது இலவச குளிர்சாதன பொட்டி மூலம் உடல் வைக்கப்பட்டு உள்ளது .இதனால் அதிரை முழுக்க சோகத்தில் ஆழ்ந்து உள்ளது..
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.