நெஞ்சை பதறவைக்கும் சிரியா நிகழ்வுகள் (காணொளி)மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளன் பஸ்ஸாருக்கு எதிராக உள்நாட்டு புரட்சியாளர்கள் கடந்த நான்கு வருடங்களாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் உதவியுடன் அதிபர் பஸ்ஸார் அரசின் ராணுவம் அங்குள்ள போராட்டக்காரர்களை மூன்று கிலோ மீட்டருக்குள் அடக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களின் வசமுள்ள அலெப்போ, ஹலப் பகுதிகளையும் கைப்பற்றி விட்டால் போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற திட்டத்துடன் பல லட்சம் மக்களையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்தி வருகிறது.

துருக்கியின் முயற்சியால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள போர் நிறுத்தத்திடையே ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
எதற்காக இடம்பெயர்கிறோம் என்றே தெரியாமல் பச்சிளம் பாலகர்கள் அகதிகளாக வெளியேறும் காட்சிகள் உள்ளத்தை உருக்குவதாக உள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறார்கள் விஷவாயு தாக்குதலால் சிரியாவில் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.