ஆர் எஸ் எஸின் வெறி செயல் கிறிஸ்துமஸ் பாடல் பாடியதால் ஹிந்து,முஸ்லீம் சிறுவர்களுக்கு அடி..!கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடிய ஹிந்து மற்றும் முஸ்லீம் சிறுவர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தாக்கியுள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் சடயமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14லிருந்து 16 வயதிற்கு உட்பட்ட 13 சிறுவர்கள்,அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது வீட்டிற்கு கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடுவதற்காக சென்றுள்ளனர்.


அப்போது அங்கு வந்த ஜெயக்குமார்,அந்த சிறுவர்களிடம் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என கேட்டுள்ளார்.அவர்களில் சிலர் தாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் எனவும்,மேலும் சிலர் தாங்கள் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு கோபமடைந்த ஜெயக்குமார்,கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் எப்படி கிறிஸ்துமஸ் பாடலை பாடலாம் என ஆத்திரத்துடன் கத்தியுள்ளார்.இதனை தொடர்ந்து அந்த சிறுவர்கள் அனைவரும் ஜெயக்குமார் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.அதன் பின்னர் வேறு சிலர் வீடுகளுக்கு சென்ற அந்த சிறுவர்கள்,அங்கு கிறிஸ்துமஸ் பாடல்களை பாடியுள்ளனர்.
ஆனால் அவர்களை பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்கள்,சிறுவர்களை தாக்கத் துவங்கியுள்ளனர்.”அவர்கள் எங்களை இந்து மதப் பாடலை பாடச் சொன்னார்கள்.ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னர் எங்களை அடித்து,உதைத்தார்கள்.”என அப்துல்லா என்ற சிறுவன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவர்களை,உடனிருந்த சிறுவர்கள் மீட்டு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து சடயமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்,ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் பத்து பேர் மீது,கலவரத்தை தூண்டியதாக கூறி ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜெயக்குமார் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர் என கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.