டாக்டர் ராமதாசுடன் இஸ்லாமிய அமைப்பு தலைவர்கள் சந்திப்பு



பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசினர். அந்தக் குழுவில், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ அனீபா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஹமீது, மறுமலர்ச்சி முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் உமர் பாரூக், ஐக்கிய தேசிய லீக் கட்சியின் தலைவர் நிஜாமுதீன், ஐ.எப்.டி. அமைப்பின் தலைவர் சிக்கந்தர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

பல்வேறு பிரச்சினைகளில் இஸ்லாமியர்களின் நலனுக்காக குரல் கொடுத்தமைக்காக டாக்டர் ராமதாசுக்கு இஸ்லாமிய தலைவர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணைத் தலைவர் கசாலி ஆகியோர் உடன் இருந்தனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.