முதல்வர் ஜெயலலிதாவின் உடலை இங்கேதான் அடக்கம் செய்யபோகிறார்கள் - படங்கள் இணைப்புமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்காக எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே இடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்வதற்கான வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்றிரவு மரணமடைந்தார்.


தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலையே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப் படுகிறது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவின் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது. பின்னர் அங்கு நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது.

இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எம்.ஜி.ஆர் சமாதியின் அருகிலேயே இதற்கான இடத்தை மார்க் செய்த பொதுப்பணித் துறை அதிகாரிகள், அங்கு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர அவசரமாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மூத்த அதிகாரிகள் கண்காணிப்பில் இந்தப் பணிகள் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் முகத்தை இறுதியாகப் பார்க்க இயலாத பொதுமக்கள், எப்படியும் அடக்கத்திற்கு முன் கடற்கரைச் சாலையில் பார்த்துவிட வேண்டும் என அங்கு குவிந்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் காணப்படுகின்றனர். எனவே, பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.