சுவாதி + ராம்குமார் முதல் அம்மா ஜெயலலிதா வரை - பீதியை கிளப்பும் தமிழச்சி
ராம்குமார் இறந்தது செப்டம்பர் 19 / 2016.

ராம்குமார் இறந்த இரண்டு நாட்களில், 'ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை' என்று அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாள் செப்டம்பர் 22/2016.

செப்டம்பர் 30-இல், 'ஜெயலலிதா மாரடைப்பால் இறந்து விட்டார்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருந்த தகவல் எனக்கு முன்தினமே கிடைத்தது.

ஜெயலலிதா எதற்காக பலியாக்கப்பட்டார் என்கிற பல தகவல்களை நாங்கள் முன்கூட்டியே அறிந்திருந்தோம். [நாங்கள் என்று சொல்வதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த சில நல்லவர்களும் அதில் அடக்கம்]

ராம்குமார் சிறைக்குள் கொல்லப்படுவதற்கு முன்தினம் செப்டம்பர் 18இல், சிறைக்குள் இருந்த ஒரு காவலர் மாற்றப்படுகிறார். அதற்கு பிறகே மறுதினத்தில் ராம்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

இத்திட்டத்தை முன்கூட்டியே தெரிவித்த அந்த நபர், 'ஏதோ நடக்கப்போகிறது' என்று பயந்தார். அதை அப்போதே நான் எழுதி இருக்க வேண்டும்.

ஆனால், "நாளை ஜாமீனில் ராம்குமாரை வெளியே விட்டுவிடுவார்கள். தமிழகமே உற்று நோக்கும் இந்த வழக்கில் சிறைக்குள் ராம்குமார் கொல்லப்பட்டால் தமிழக அரசுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே ராம்குமாரை வெளியே அனுப்பிவிட்டு அவனை கொல்லவே திட்டமிடும்" என்று கூறினேன். ஆனால் அந்த நபர் சொன்னது போலவே சிறைக்குள் ராம்குமார் படுகொலை செய்யப்பட்டார்.

அந்த தகவல் சொன்ன நபரே செப்டம்பர் 28 இல், "ஜெயலலிதாவிற்கு உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. மூளைச்சாவு நடந்து கொண்டிருக்கிறது" என்றார். அதை எனக்கு சொன்னது செப்டம்பர் 29 இல்.

'நாம் எழுதுவோம்' என்றேன்.

"தமிழ்நாட்டில் பதட்டம் மட்டுமல்ல, அது கலவரங்களை ஏற்படுத்தும் நிலைக்கு செல்லும்" என்றார்.

தமிழக மக்களிடம் உண்மைகளை எடுத்துச் செல்ல வேண்டும். பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் இந்து பரிவாள அமைப்புகளின் அராஜகங்களை நாம் அம்பலப்படுத்தியே தீர வேண்டுமென செப்டம்பர் 29 இல், "ஜெயலலிதா இறந்துவிட்டார்" என்கிற தகவலை அறிவித்தேன்.

அதிர்ச்சி அடைந்த அந்த அரசியல் வட்டாரம் திட்டத்தை மாற்றிக் கொண்டது. அப்போலோ, "ஜெயலலிதா இறக்கவில்லை. சாதாரண ஜீரம்தான். இரண்டு நாட்களில் சென்று விடுவார்" என அறிவித்தது.

திட்டங்கள், குழப்பங்கள், பதற்றங்கள், அச்சங்கள், தடுமாற்றங்கள், உளறல்கள் என அடுத்த இரு மாதங்களில் பா.ஜ.க / ஆர்.எஸ்.எஸ் நிலை இருந்தது.

என்னை பேச விடாமல் செய்வதற்காக வழக்கு போட்டு அச்சுறுத்தியது. வீட்டு தொலைபேசியில் இலண்டனில் இருந்து கொலை மிரட்டல்கள் விடுத்தது. "சுவாதி / ராம்குமார் கொலை வழக்கு குறித்து பேசினால் கொல்லப்படுவாய்" என மிரட்டியது. ப்ரெஞ்ச் காவல்துறை கவனத்திற்கு இத்தொலைபேசி கண்காணிப்பில் சென்றது.

வழக்கு பாயும் என்று அச்சுறுத்திய தமிழக / இந்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை 50 நாட்களாகியும் எடுக்கவில்லை. எனவே நானே முன்வந்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.

"ப்ரெஞ்ச் அம்பாசி மூலமாக விளக்கம் கேட்கப்பட்டது. 25 நாட்களாக முரணான பதில்கள் வந்தன. ப்ரெஞ்ச் வழக்கறிஞரிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி இருந்ததால் 'ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கையை சமர்பிக்காவிட்டால் அது வதந்தி என்று சொல்வது தவறு' என வாதிட்டார். இந்தியாவிற்குள்ளும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையிலேயே டிசம்பர் 5 இல் ஜெயலலிதா இறந்து விட்டதாக தமிழக அரசும் அப்போலோவும் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 22 க்கு பிறகு ஜெயலலிதா எந்த அறிக்கையும் விட்டிருக்க முடியாது. கையெழுத்து போட்டிருக்க முடியாது. கைநாட்டு வேண்டுமானால் சுயநினைவு இல்லாத அவரின் கைநாட்டாக இருக்கும்.

எனவே ஜெயலலிதா சசிகலா மன்னார் மாபீயா கூட்டணிக்கோ அல்லது வேறு நபர்களுக்கே அவருடைய சொத்துக்களை செப்டம்பர் 2016க்கு பிறகு எழுதி வைத்திருந்தால் அது செல்லாதவை என அறிவிக்கும் நடவடிக்கையை உண்மையான அதிமுக தொண்டர்கள் எடுக்க வேண்டும்.

சசிகலா மன்னார் கூட்டணி தமிழ்நாட்டு அரசியலை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தைவிட ஜெயலலிதா சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மத்திய அரசுக்கு ஒத்துழைத்தனர். ஜெயலலிதா அப்போலோவில் இருந்த போது சசிகலா / இளவரசி தவிர வேறு யாரும் ஜெயலலிதா அறைக்குள் நுழையாதபடி பார்த்துக் கொண்ட சசிகலாவின் அதிகாரம் மக்களதிகாரமல்ல.. சூழ்ச்சி.... மாபீயா கூட்டத்தின் கைக்கூலி. இவரை தமிழ்நாட்டு மக்கள் அரசியலுக்குள் வராதபடி அப்புறப்படுத்தாவிட்டால் ஒட்டு மொத்த தமிழீனமும் கேணயர்கள்தான் என்பதை நாமே ஒத்துக் கொள்ள வேண்டும்.

தமிழச்சி
08/12/2016


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.