வாலாட்ட வருகிறான் “வார்தா”வங்க கடலில் உருவாகியுள்ள வார்தா புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளைத் தாக்குகிறது. இப்புயல் சென்னையையும் தாக்கும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் புயலாக மாறுகிறது. இதற்கு வார்தா என பெயரிடப்பட்டுள்ளது.

இப்புயல் நாளை அந்தமான் நிக்கோபர் தீவுகளை முதலில் தாக்குகிறது. அப்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். இப்புயலால் அந்தமான் தீவுகளில் 25 செமீ மழை பெய்யக் கூடும்.

அந்தமான் தீவுகள் நிலச்சரிவு உள்ளிட்ட பெரும் சேதங்களை எதிர்கொள்ள நேரிடக் கூடும். இதையடுத்து வார்தா புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே 11 மற்றும் 12-ந் தேதிகளில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது மணிக்கு 100 முதல் 130 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.

வார்தா புயலால், சென்னை 11,12-ந் தேதிகளில் மிக பலத்த மழையை எதிர்கொள்ளக் கூடும். புயல் பாதை இதுதான் என நிச்சயமாக தெரியாத நிலையில் தொடர்ந்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.