மோடி ஊழல் செய்த ஆதாரம் உள்ளது! போட்டுடைத்த ராகுல் காந்திரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக பார்லிமென்டில் பேச என்னை மோடி அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் ஊழல் செய்துள்ளார். பிரதமரின் ஊழலை வெளிப்படுத்தும் ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னிடம் உள்ள ஆதாரத்தை கண்டு பிரதமர் பயப்படுகிறார். நான் பேசினால் உண்மை வெளிப்படும் என அஞ்சுகிறார்.அரசு விரும்பவில்லைபார்லிமென்டிற்கு வராமல் பிரதமர் புறக்கணிக்கிறார். பொதுக்கூட்டத்திற்கும், இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் செல்ல பிரதமருக்கு நேரம் உள்ளது.

பார்லிமென்டிற்கு வரவும், விவாதத்தில் பங்கேற்கவும் நேரமில்லை. நாட்டிற்கும், மக்களுக்கும் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். பார்லிமென்டில் நான் பேச விரும்புகிறேன். ஆனால், பிரதமர் இதனை விரும்பவில்லை.

பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் விவாதம் நடத்த அரசு விரும்பவில்லை. விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் பதிலளிப்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். எங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதை அரசும், பிரதமரும் விரும்பவில்லை.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் பேச அரசு அனுமதிக்க வேண்டும் எனக்கூறினார்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.