முத்துப்பேட்டை அருகே கிரிக்கெட் நடத்துவதில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்துமுத்துப்பேட்டை  கோட்டூர் அருகே கிரிக்கெட் போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆனந்தராஜ் (25), வைத்தியலிங்கம் மகன் வெங்கடேசன் (25). 2 பேரும் நண்பர்கள். இவர்கள்  ஊரில் கிரிகெட் போட்டி நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக யாரை அழைப்பது, எங்கே நடத்துவது என்பதில் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று முன்தினம் மாலை இவர்கள் கிரிகெட் போட்டி சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும் போது வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தராஜனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். காயமடைந்த ஆனந்தராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைகாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறித்து திருக்களர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை தேடி வருகிறார்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.