அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அழைப்பு..!அதிமுகவிற்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் இன்று போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்தனர்.

அப்போது, அதிமுகவை உடைக்க சதி நடைபெறுவதால், அதிமுகவின் மையப் புள்ளியாக இருந்து கட்சியை வழிநடத்துமாறு சசிகலாவிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

ஜெயலலிதாவின் வழியில் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்கள், தேவையற்ற வதந்திகளுக்கு முடிவு கட்டுமாறும் சசிகலாவிடம் வலியுறுத்தினர்.

44 ஆண்டுகால அதிமுக பாரம்பரியத்தை காப்பாற்ற சசிகலா தலைமையேற்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

இதுபோல், 34 வருடங்களாக ஜெயலலிதாவுடன் பழகியவர் என்பதால் சசிகலா அதிமுகவின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவர் என சி.ஆர்.சரஸ்வதி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவை முதல்வராக்கியதில் சசிகலாவுக்கு பெரும் பங்குண்டு என்றும் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.