ஹிலரி கிளிண்டனுக்கு மீண்டும் வாய்ப்பு !



அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் டிரம்பை விட ஹிலாரி கிளிண்டன் 25 லட்சம்  வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார்.

அமெரிக்க  ஜனாதிபதி தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. எனினும், மொத்த வாக்கு எண்ணிக்கை இதுவரை நிறைவடையவில்லை.தற்போது வரை வெளியான வாக்கு எண்ணிக்கை படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் 65,152,310 வாக்குகள் பெற்றுள்ளார்.

அவரை தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 62,626,216 வாக்குகள் பெற்றுள்ளார். மற்ற வேட்பாளர்கள் 7,373,248 வாக்குகள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் டிரம்பை விட ஹிலாரி 1.9 சதவீதம் 2,526,094 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் எலக்ட்டோரல் காலேஜ் முறைப்படி 538 இடங்களில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சி 306 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சி 228 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டொனால்ட் டிரம்ப் தற்போது  ஜனாதிபதி தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வெற்றியை திரும்ப பெற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு ஹிலாரி கிளிண்டனை அனுப்ப வேண்டும் என பொதுமக்களில் ஒரு பிரிவினர்  கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இதுபோன்று அதிகளவில் கையெழுத்து போராட்டத்தில் யாரும் ஈடுப்பட்டதில்லை.

இந்த கையெழுத்து போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலரான டேனியல் பிரிசினாப்  என்பவர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற உள்ள வாய்ப்புகள் உள்ளதாக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் விதிமுறைகளில் அதிக மக்கள் வாக்கு எண்ணிக்கை பெற்றவர் ஜனாதிபதி  ஆவார் என வகுக்கப்பட்டிருந்தால், ஹிலாரி தான் அதிபர்.
ஆனால், தேர்தல் விதிமுறைகள் மாகாண வாக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளதால் தற்போது டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும், ஹிலாரி கிளிண்டன் மீண்டும்  ஜனாதிபதியாக  ஓர் வாய்ப்புள்ளது.

அதாவது, பொதுமக்கள் வாக்குகளை தொடர்ந்து ஒருவர் உடனடியாக அதிபர் ஆக முடியாது. இதன் அடுத்தக்கட்டமாக, ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தேர்தல் அமைப்பை(Electoral College) சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை இறுதியாக பதிவு செய்ய வேண்டும்.

பெரும்பாலும், இந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள்.ஆனால், அதே சமயம் தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு மாற்று வேட்பாளருக்கும் இவர்கள் வாக்களிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இவ்வாறு இந்த தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்தால் அவர் நிச்சயமாக  சட்டப்பூர்வமாகவே தேர்வு செய்யப்படுவார்.தற்போது இந்த உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் வைத்துள்ளோம்.

இதுபோன்ற நடவடிக்கை அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்தது இல்லை. ஆனால், அதே சமயம்,  ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக இதுபோன்ற கடுமையான போராட்டங்களும் முன்னர் நடந்ததில்லை.

எனவே, இவற்றை கருத்தில் கொண்டு மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும்’ என டேனியல் கூறி உள்ளார்.

தற்போது வரை டிரம்பிற்கு எதிராக சுமார் 50 லட்சம் பேர் வரை கையெழுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எதிர்வரும் டிசம்பவர் 19-ம் திகதி மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யவுள்ளதால் அதன் முடிவுகள் டிரம்பின் வெற்றியை முறியடிக்குமா என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.