முத்துப்பேட்டை அருகே துப்பாக்கி சூடு சம்பவத்தில் மேலும் ஒருவர் மீது வழக்குமுத்துப்பேட்டை அருகே நேற்றுமுன்தினம் கோஷ்டி மோதல் தகராறில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் மேலும் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை  கீழக்காட்டை சேர்ந்தவர் அய்யாறு (52). இவர் ஏரிபுறக்கரையோரம் உள்ள தனது நிலத்தில் சாகுபடி செய்துள்ள சம்பா பயிர்கள் வெயிலில் வாடியது. இதனால் பயிர்களை காப்பாற்ற அய்யாறு தரப்பினர் அருகேயிருந்த ஏரியிலிருந்து தண்ணீர் இறைக்க முயன்றனர். இதற்கு ஏரியை பாசி குத்தகைக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படும் ரவிச்சந்திரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் ஏற்பட்ட கோஷ்டி தகராறில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் தனது காரிலிருந்த டபுள் பேரல் துப்பாக்கியை எடுத்து வந்து அய்யாறு தரப்பினரை சுட்டதில் அய்யாறு, சத்தியராஜ் ஆகியோர் காயமடைந்தனர். ரவிச்சந்திரன் உடன் வந்தவர்கள் அரிவாளால் வெட்டியதில் அய்யாறு தரப்பைச் சேர்ந்த அண்ணாதுரை(48), திருமுருகன் என்கிற செல்வேந்திரன்(36) ஆகியோரும் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். இந்தநிலையில் நேற்று  துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அய்யாறு, சத்தியராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருத்துறைப்பூண்டி கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் வழக்கில் தொடர்புடையதாக ரவிச்சந்திரனின் சகோதரர் ராமமூர்த்தி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை  தேடி வருகின்றனர்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.