இஸ்ரேலை கைவிட்டது அமெரிக்கா ஐ.நா.சபையில் பாலஸ்தீன ஆதரவு தீர்மானம் நிறைவேறியதுபாலஸ்தீன நிலப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறியுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் நடுவே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் வலுக்கட்டாயமாக குடியிருப்புகளை அமைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் நடவடிக்கைகளை சட்டப்படி செல்லாது என்றும், இனிமேலும் ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க கூடாது என்றும், இஸ்ரேல் நடவடிக்கை, சர்வதேச கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வலியுறுத்தி, எகிப்து ஒரு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்திருந்தது.

வாக்கெடுப்பு
இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரவு வாக்கெடுப்பு நடைபெற்றது. எதிர்ப்பு இன்றி 14-0 என்ற வாக்குகளில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இஸ்ரேலின் நட்பு நாடாக அறியப்பட்டு வரும் அமெரிக்கா இந்த தீர்மானத்திற்கு எதிராக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த மறுத்துவிட்டது.

ஆக்கிரமிப்பு குடியிருப்பு
பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எனவே 1967க்கு பிறகு பாலஸ்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் ஏற்படுத்திய குடியிருப்புகள் சட்ட அங்கீகாரத்தை இழக்க உள்ளது. அதேபோல இனிமேல் புதிய குடியிருப்புகளை அமைக்க முடியாது.

வரவேற்பு
ஐ.நா.சபை செயலாளர் பான் கீ மூன் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளார். இனிமேல் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2011ல் இதேபோன்ற தீர்மானம் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டபோது இதே ஒபாமா தலைமையிலான அமெரிக்காதான், அதை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி வீழ்த்தியது.

இஸ்ரேல் கோரிக்கை புறக்கணிப்பு
இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் ஒதுங்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.