"இதோட நீ ஒளிந்தாய்" என்று கூறி சமூக ஆர்வலர் மாலிக்கை சரமாரியாக வெட்டிய கும்பல் - விரிவான ரிப்போர்ட்முத்துப்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் மூலம் அகற்றிய சமூக ஆர்வலருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு!
மூன்று பேர் கொண்ட கும்பல் வெறி செயல்!!
பெரும் பரபரப்பு..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நீதிமன்றம் மூலம் அகற்றிய சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவரை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்துப்பேட்டை கொத்பா பள்ளியைச் சேர்ந்த முகம்மது மாலிக்(32). சமூக ஆர்வலரான இவர் தற்பொழுது தமிழகத்தில் நீர் நிலைகள் அழிந்துவருவதையடுத்து சமீப காலமாக நீர் நிலைகளை மீட்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை மீட்பது குறித்த பிரச்சாரங்களிலும் ஈடுப்பட்டு வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 100 குளங்கள் இருந்தன பின்னர். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி பட்டியலில் 100 குளத்திற்கு பதில் 70 குளமாக இருந்து வந்தது. தற்பொழுது படிப்படியாக குறைந்து பேரூராட்சி பட்டியலில் 40 குளங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் மக்கள் கண்ணில் தென்படுவது 10-க்கும் மேற்பட்ட குளங்கள் தான். அதனால் நகர் பகுதியில் நிலத்தடிநீர் குறைந்து பலரது வீடுகளில் ஆள்குழாயில் தண்ணீர் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு காணாமல் போன குளங்களையும் ஆக்கிரமிப்பு உள்ள குளங்களையும் மீட்கும் பணியில் சமூக ஆர்வலர் முகம்மது மாலிக் ஈடுபட்டு வந்தார். அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மிகப்பெரிய பரப்பளவு கொண்ட பட்டரைக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து நீதிமன்றம் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தமிழக அரசு நீர் நிலைகளை மீட்க வட்டாட்சியர் தலைமையில் ஒரு புதிய குழு அமைக்கவும் அதிரடியாக உத்திரவிட்டது. அதன்படி தமிழக அரசு 540 என்ற அரசாணையை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக சென்ற 2015-ம் ஆண்டு பட்டறைக்குளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 40-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிக்குளம் மற்றும் செக்கடி ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தமிழக அரசு நியமணம் செய்த குழுவிற்கு புகார் செய்திருந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி 4-ம் தேதி குளத்தின் ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. இந்தநிலையில் இந்த இரு குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதின் எதிரொலியாக சமூக ஆர்வலர் முகம்மது மாலிக்கிற்கு மேலும் பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்தது. மேலும் சமூக வளையத்தளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் ஆக்கிரமிப்பு அகற்றியதற்காக முகம்மது மாலிக்கு மீது கடுமையான விமர்சனங்கள் செய்து தொடர்ந்து அச்சுறுத்தல் செய்து வந்தனர.; இதனையடுத்து சமூக ஆர்வலர் முகமது மாலிக் திருவாரூர் எஸ்.பி, முத்துப்பேட்டை டி.எஸ்.பி உள்ளிட்ட போலீசாரை சந்தித்து தனக்கு பாதுக்காப்பு கோரி புகார் மனு அளித்து இருந்தார்.

இந்தநிலையில் சமூக ஆர்வலர் முகமது மாலிக் நேற்று முன்தினம் இரவு தனது ஆசாத் நகர் அலுவலகத்திலிருந்து தனது நண்பருடன் தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அவரின் வீட்டின் நூறு அடி தூரத்தில் உள்ள நண்பரின் விட்டில் இறக்கிவிட்டு சிறிது தூரம் சென்றுக்கொண்டிருந்தபோது அங்கு ஏற்கனவே வருகைக்காக காத்திருந்த மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் 'இனி கோர்டில் வழக்கு தொடர்வா.. இதோட ஒளிந்தாடா' எனக்கூறி முகமது மாலிக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிஉள்ளனர். அப்பொழுது முகமது மாலிக்கின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்த நண்பர் மற்றும் தெரு மக்கள் வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் காணப்பட்ட சமூக ஆர்வலர் முகமது மாலிக்கை அப்பகுதியினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சம்பவ இடத்தை முத்துப்பேட்டை டி.எஸ்.பி அருண் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மூலம் போராடி சமூக ஆர்வலரை மர்ம நபர்கள் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.முகைதீன் பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.