முத்துப்பேட்டையில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிமுத்துப்பேட்டையில் குண்டும் குழியுமான வேதாரண்யம் சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப் பேட்டையிலிருந்து விலாங்காடு வரை உள்ள வேதாரண்யம் சாலை பல ஆணடுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை என்பதால் தற்போது சாலையின் காப்பிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தில்லைவிளாகத்திலிருந்து கரையங்காடு, விலாங்காடு  கிராமம் வரை உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மோசமாக உள்ளது. இதனால் வேதாரண்யத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் அங்கிருந்து முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் காலதாமதமாகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் வாகனங்களும் குண்டும் குழியுமாக உள்ள பள்ளங்களில் விழுந்து  விபத்துக்குள்ளாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் இருச்சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் அருகே தனியார் கல்லூரி உள்ளதால், கல்லூரி மாணவ, மாணவிகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். சாலையை  சீரமைக்க வேண்டும் என பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காமராஜ்  கூறுகையில்: முத்துப்பேட்டை அதிகளவில்  பேருந்து மற்றும் வாகன  போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். தில்லைவிளாகம் முதல் கரையங்காடு வரையிலான இந்த சாலை தற்பொழுது குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பல வகையில் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை சீரமைக்க இதுவரை  பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் முன் வரவில்லை.அதேபோல் நெடுஞ்சாலை துறையினரும் கண்டும்காணாமல் உள்ளனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முனைப்புகாட்டி சாலையை சீரமைக்க முன்வரவேண்டும்  என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.