போலீஸாருக்கு குடிநீர், உணவு: தமுமுக அமைப்பினரின் மனிதநேயம் – தி இந்து வின் பாராட்டு!முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி அரங்கம் மற்றும் அதைச் சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நேற்று குடிநீர், உணவு இலவசமாக வழங்கப்பட்டது.

தலைவர்கள் மரணம், கடை யடைப்பு, அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், தேசிய தலைவர் கள் பங்கேற்கும் மாநாடுகள் என்றாலே பாதுகாப்பு பணி என்ற பெயரில் சில தினங்களுக்கு போலீஸார் சாலையில் நிற்க வேண்டியிருக்கும். அவர்கள் பெரும்பாலும் வெளியூரிலிருந்து அழைக்கப்பட்டிருப்பர். அவர் களுக்கு நேரத்துக்கு உணவு, தேவையான குடிநீர் கிடைப்ப தில்லை. அதிலும் முழு கடை யடைப்பு, தலைவர்கள் மரணம் போன்ற சூழல்களில் உணவகங் கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் போது எதுவும் கிடைப்பதில்லை.

ஓய்வு இல்லாத பணி, மேலதிகாரிகளின் அழுத்தம், நேரத்துக்கு உணவு கிடைக் காத சூழல் போன்ற காரணங் களால் போலீஸார் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை நிர்வாகமும் சரி, பொது மக்கள் தரப்பிலும் சரி, அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம், ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் வைக்கப் பட்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான போலீஸா ருக்கு, அவர்களின் நிலையைப் புரிந்துக் கொண்டு, மனித நேயத்தோடு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போலீஸாருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. இது போலீஸார் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமுமுகவின் இந்த மனிதநேய பணியை அனைத்து போலீஸாரும் பாராட்டினர்.

இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறும்போது, இதுபோன்ற அசாதாரண சூழல் களில், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களும், போலீஸாரும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளை முடிந்தவரை செய்யுமாறு எங்கள் அமைப்பின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன்.

அதன் அடிப்படையில் நேற்று போலீஸார் மற்றும் பொதுமக் களுக்கு 30 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள், 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுமட்டுமல்லாது, சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்நிலையங்களில், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் ரயிலை தவறவிட்ட பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இதற்காக ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டது என்றார்.

நன்றி: தி இந்து தமிழ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.