முத்துப்பேட்டையில் காசோலை வாங்க காஸ் நிறுவனங்கள் மறுப்புமுத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கோட்டூர், பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டையிலேயே இயங்கும் ஏஜென்சிகள் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றனர்.  டோர் டெலிவரிக்கு ரூ30லிருந்து ரூ70 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சிலிண்டருக்கான ரொக்க தொகையை சில்லரையாக வழங்கிட கேட்டு ஏஜென்சி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு  நெருக்கடி கொடுத்து வருகின்றன. தற்போது அன்றாட தேவைக்கான பணம் பெறவே வங்கி வாசலில் தவமிருக்கும் வாடிக்கையாளர்கள், காஸ் ஏஜென்சிகள் கொடுக்கும் நெருக்கடியால் பாதிக்கபட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ராணுவ விமானப்படை வீரர் ஜாம்புவானோடை ராஜ்மோகன் கூறுகையில், சமையல் காஸ் சிலிண்டருக்கான தொகையை செக்காகவோ, கார்டு வாயிலாகவோ கொடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் காஸ் ஏஜென்சிகள் ரொக்க தொகையை சில்லரையாக கேட்டு வாடிக்கையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
 இல்லாவிட்டால் சிலிண்டர் கிடையாது என்கின்றனர். சிலிண்டர் இல்லாவிட்டால் வீடுகளில் சமையல் செய்வது திண்டாட்டமாகி விடும். இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கி சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இந்த அவலம் தொடர்ந்தால் மக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.