துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் தங்கப்பரிசு அறிவிப்பு !துபாயில் வருடந்தோறும் நடைபெறும் ஷாப்பிங் பெஸ்டிவலின் சிறப்பம்சமாக கிலோ கணக்கில் தங்கம் பரிசாக வழங்கப்படும். அந்த வகையில் 22வது வருடமாக நடைபெறவுள்ள துபை ஷாப்பிங் பெஸ்டிவலின் இந்த வருடத்திற்கான தங்க பரிசு திட்டம் குறித்த அறிவிப்பை துபை தங்க, வைர நகை வர்த்தக சபை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடங்களில் தினமும் ஒரு நபருக்கு 1 கிலோ தங்கம் பரிசு என்பதை மாற்றி தினமும் ஒருவருக்கு 500 கிராம் தங்கமும் மேலும் இருவருக்கு தலா 250 கிராம் தங்கம் என 33 நாட்களுக்கு 99 நபர்களுக்கும் கடைசி மற்றும் 34 வது நாள் அன்று பம்பர் பரிசாக 100 வது வெற்றியாளருக்கு மட்டும் 1 கிலோ தங்கம் என மொத்தம் 34 கிலோ தங்கம் வழங்கப்படவுள்ளது, இதன் சந்தை மதிப்பு 5 மில்லியன் திர்ஹம்.

தங்க பரிசு திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களிலிருந்து எதிர்வரும் 2016 டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 2017 ஜனவரி 28 ஆம் தேதி வரையில் குறைந்தபட்சம் 500 திர்ஹம் மதிப்புள்ள தங்க நகைகள், வைர நகைகள், முத்துக்கள், கடிகாரங்கள் வாங்குவோருக்கு இலவசமாக கூப்பன் ஒன்று தரப்படும். வாடிக்கையாளர்கள் கூப்பன்களை நிரப்பி அதற்குரிய பெட்டியில் போட்டபின் தினமும் இரவு 8 மணிக்கு தேராவிலுள்ள துபை கோல்டு சூக்கில் பகிரங்கமாக மக்கள் முன் குலுக்கல் நடத்தப்பட்டு வெற்றியாளர்களின் பெயர் அங்கேயே அறிவிக்கப்படும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு 100 கிலோ தங்கமும் 2015 ஆம் ஆண்டு 56 கிலோ தங்கமும் பரிசாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது 34 கிலோ தங்கம் மட்டுமே வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.