முத்துப்பேட்டையில் பிஜேபி மாரிமுத்துவின் அடாவடி: தாய் பிர்தவ்ஸுக்கு மிரட்டல் மகனுக்கு அடி - போலீஸ் விசாரணைமுத்துப்பேட்டை மருதங்காவெளி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). இவர் பா.ஜனதா மாவட்ட தலைவராக உள்ளார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள மளிகைகடையின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அக்பர்அலி (45) என்பவரின் மகன் 12 வயதை சேர்ந்த சிறுவன். அவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6–ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவன் சாமான் வாங்க கடைக்கு வந்தான். அப்போது மாரிமுத்து  சிறுவனை கேலி செய்துள்ளார்  பதிலுக்கு அச் சிறுவனும் மரிமுத்துவை  கேலிசெய்துள்ளான்  இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து   அந்த சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அந்த சிறுவன் தனது தாய் பிரிதவுசிடம் கூறியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட பிரிதவுசை, மாரிமுத்து சத்தம் போட்டு மிரட்டியுள்ளார்  . இதுகுறித்து பிரிதவுஸ் முத்துப்பேட்டை போலீசில் மாரிமுத்து மேல்  புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மகேந்திரபூபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.