வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெ. உயிருடன் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசர்வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு பதிலடி அளிப்பது போன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனதால் மக்கள் கடந்த 2 மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார்கள். வங்கிகளில் ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமாக பணம் தருவது இல்லை. ஆனால் சேகர் ரெட்டியிடம் மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் அதுவும் கோடிக் கணக்கில் இருந்தது எப்படி?

தனியார் வங்கிகள்
மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பி வைக்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் தெருமுனை பொதுக்கூட்டங்கள் நடத்த உள்ளோம்.

சொத்துக்கள்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதில் பல சொத்துக்கள் சிலரின் வசம் உள்ளது. அவற்றை மீட்க கட்சி சார்பில் சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவின் திடீர் மரணம் துரதிர்ஷ்டவசமானது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை புகழ் பெற்றது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? அனைவரும் பொய் சொல்கிறார்கள் என நான் நம்பவில்லை.

வெள்ளை அறிக்கை
வெள்ளை அறிக்கையோ, கருப்பு அறிக்கையோ வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா? அவரின் மரணம் பற்றிய வதந்திகள் தேவையில்லாதவை.

மதுக்கடைகள்
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூரண மதுவிலக்கே காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஆகும். முதலில் 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை தானும் வலியுறுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் தான் திருநாவுக்கரசர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.