முத்துப்பேட்டை அருகே காவல் நிலைய புதிய கட்டிடம் விரைவில் செயல்பாட்டிற்கு வருமா? போலீசார் எதிர்பார்ப்புமுத்துப்பேட்டை அருகே எடையூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல்நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் கிராமத்தில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இது ஏற்கனவே சங்கேந்தி கடைத்தெருவிலிருந்த பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்தது. பின்னர் அக்கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழ தொடங்கின. இதனால் கலக்கமடைந்த போலீசார் கட்டிடத்தை காலி செய்து அங்கிருந்து  மெயின் ரோட்டில் வாடகை கட்டிடத்துக்கு இடம்மாறினர்.  அன்றிலிருந்து இன்று வரையிலும் அதே கட்டித்தில்தான் காவல் நிலையம் இயங்கி வருகிறது. காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பணி செய்வதற்கே விருப்பம் இல்லாமல் இருந்து வருகின்றனர்.

அதேபோல் குற்ற சம்பவங்களில் ஈடுப்படும் கைதிகளை பாதுக்காப்பற்ற நிலையில் காவல்நிலையத்தில் வைக்கும் சூழல் ஏற்படுகிறது. புகார் கொடுக்க வரும் பொதுமக்களும், போதிய இடவசதிகள் மற்றும் வாகனங்களை நிறுத்தவும் இடையூறாக உள்ளது. இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு எடையூர் அரசு மருத்துவமனை அருகே ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய காவல் நிலையம் கட்ட ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் சகல வசதிகளுடன் புதிய கட்டிடம், அரசு அலுவலகங்களைவிட கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதன் திறப்புவிழா நடத்துவதற்கு மாவட்ட அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.  புதிய காவல் நிலையம் கட்டிடம் கவனிப்பின்றி உள்ளது. இந்நிலை நீடித்தால், புதிதாக கட்டப்பட்ட காவல்நிலையமும் வீணாகி பயனற்ற நிலைக்கு மாறிவிடும். எனவே பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என போலீசார் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும், காவல் நிலையத்திற்கு, நீண்ட போராட்டத்திற்கு பின் புதிய கட்டிடம் கிடைத்துள்ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. கட்டிடம் கட்டி அப்படியே போட்டுவிட்டால், அது பயனளிக்காமல் போய்விடும். எனவே காலதாமதமின்றி புதிய காவல் நிலையத்தை திறந்து பயனுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மத்திய மண்டல போலீஸ் ஐஜி வரதராஜூ கூறுகையில் கொரடாச்சேரி, எடையூர் காவல் நிலையங்களின் ஆவணங்கள் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை சென்னை தலைமையகத்துக்கு அனுப்பட்டுள்ளது. இந்த வாரத்திற்குள் இரண்டு காவல்நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.