கோவில் கட்ட நிலம் ஒதுக்கிய பாகிஸ்தான்: மகிழ்ச்சியில் இந்துக்கள்இஸ்லாமாபாத்: கோவில் கட்ட பாகிஸ்தான் நிலம் ஒதுக்கியதால், அங்குள்ள இந்துக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் நிறைந்த நாடு. இங்கு மிகக் குறைந்த அளவில் மட்டுமே இந்துக்கள் வசித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவில் மட்டுமே கோவில்கள் உள்ளன. அவற்றில் சில கோவில்கள் உள்ளூர் இயக்கங்களாலும், தீவிரவாதிகளாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.


இவர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக, இந்து விழாக்களை கொண்டாடுவதில்லை. இஸ்லாமாபாத்தின் சாத்தாரில் பெரிய கிருஷ்ணர் கோவில் மட்டும் உள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய, எந்தவித வசதிகளும் கிடையாது. இதற்காக நீண்ட தொலைவு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் புதிதாக கோவில் கட்டவும், இடுகாடுகள் ஏற்படுத்தி தரவும் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கை நீண்ட நாட்களுக்கு பிறகு, தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.