மிக அவசரமாக: இஸ்லாமிய சமூக தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசிக்க வேண்டிய தருணம்.... செய்வார்களா?சென்ற வருடம் டிசம்பர் 6 போராட்டம்  சென்னை பெரு வெள்ளத்திற்காக நிருத்தி விட்டு மக்களுக்காக களத்தில் இறங்கி உதவி செய்தது இஸ்லாமிய சமூகம்  அந்த அறப்பணிகளை பார்த்து நம் இஸ்லாமிய இயக்கங்களையும்  நம் சமூகத்தையும் இந்த  நாடே பாராட்டியது
நம் அறிந்த ஒன்று. அதை பொறுக்க முடியாத சில பாசிச தீய சக்திகள் எவ்வளவு முயற்சி செய்தும்  நம் அறப்பணிகளை மக்கள் மனதில் இருந்து அகற்ற முடியவில்லை என்பது உண்மை .

இந்த வருடம் போராட்டம் அறிவித்து இருக்கும் தருணத்தில் தமிழக முதல்வர் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் இருக்கிறது இந்த தருணத்தில் கண்டிப்பாக அனைத்து இயக்கங்களும் ஒன்று கூடி ஆலோசனை செய்ய வேண்டும் நாளை பாபர் பள்ளி மீட்பு  போராட்டம் நடக்க இருக்கும் நிலையில்   இதை வைத்து கூட சில விசமிகள் ஆதாயம் அடைய காத்து கொண்டு இருக்கலாம் தற்போது நடக்கின்ற விசையங்களை பார்த்து கொண்டு இருக்கும் போது அதற்கான சாத்திய கூறுகள் அதிகமாகவே இருக்கிறது . போராட்டத்தை காரணம் காட்டி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று அதிகாரங்கள் பாசிச வாதிகள் கையில் போய்விட கூடாது . என்பதாலும் பாசிசத்தின் கோரா பிடிக்கு நம் தமிழகமும் நம் சமுதாய மக்களும் பலிக்க ஆகிவிக்கூடாது   அதற்கான வாய்பை நாம் உருவாக்க வேண்டாம் என்பதே சாமானிய இஸ்லாமியர்களின் விருப்பம் .இயக்க தலைவர்கள் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுங்கள்

நண்பர்கள்  உங்களுடைய  கருத்துக்களை  பதிவு  செய்யுங்கள்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.