இந்தியர்களுக்கு ‘ஆப்பு’ ரெடி - டொனால்ட் டிரம்ப்!ஜனவரி 20ல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், வெளிநாட்டைச் சேர்ந்த நபர்கள் அமெரிக்காவில் பணியில் அமர்த்துவது நிறுத்தப்படும் என்று பேசியுள்ளார்.
‘என் பிரசாரங்களின் போது பணியில் இருந்து நீக்கப்பட்ட அமெரிக்கர்களிடம் பேசினேன். வெளிநாட்டினர் அவர்களின் வேலைக்கு மாற்றாக நாட்டுக்குள் வந்தனர். அவர்களுக்கு பதிலாக பணியில் அமர்த்தப்பட்டனர். இனிமேலும் இது நடக்க நான் விடமாட்டேன். கடைசி அமெரிக்கனின் உரிமையை பாதுகாக்கும் வரை நாம் போராட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
H-1B விசா மூலம் பல வெளிநாட்டினர், குறிப்பாக அதிக இந்தியர்கள் அமெரிக்காவில் பணிக்காக குடியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான கடுமையான சட்டங்களை ட்ரம்ப் கொண்டு வந்தால் இவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.