பொது சிவில் சட்டம் கொண்டு வர வாய்ப்பில்லை - தொல். திருமாவளவன்



ரூபாய் நோட்டு விவகாரத்தால் மத்திய அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய திருமாவளவன், பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். மேலும், ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.