பாகிஸ்தான் விமான விபத்தில் ஜுனைத் ஜம்ஷத் அவர்களும் வபாத்தானார்.பாகிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி   அதில் பயணம் செய்த 47 பயணிகளும் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது அறிந்ததே..

 பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானமே,  இன்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய நிலையில், அம்மாவட்டத்தின், பிப்லியன் பகுதி அருகே விழுந்து நொறுங்கியது.

இதில் விமானத்தில் பயணித்த 9 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 47 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில் ஒரு காலத்தில் பாகிஸ்தானின் பிரபல பாடகராக இருந்து பின்னர் இஸ்லாத்தை பூரணமாக உணர்ந்து தனது வாழ்க்கையை இஸ்லாமிய பிரசாரத்துக்கு செலவிட்ட தப்லீக் ஜமாஅத் சகோதரர் ஜுனைத் ஜம்ஷத் ( 52) அவர்களும் இந்த விமானத்தில் தன் மனைவியுடன்  பயணம் செய்து விபத்தில்  வபாத்தாகி உள்ளதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.