உலகின் மிகவும் குண்டான எகிப்திய பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சைசுமார் 500 கிலோ எடையுடன் வாழும் உலகின் மிகவும் குண்டான பெண்ணான, எகிப்து நாட்டைச் சேர்ந்த ஈமான் அஹ்மது அப்துல் அதீ (Eman Ahmad Abdul Ati) என்ற 36 வயது பெண்ணுக்கு மும்பையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.(இவருக்கு முன் அமெரிக்கா, மிச்சிகனை சேர்ந்த கரோல் யாகர் என்ற பெண்ணே சுமார் 539 கிலோ எடையுடன் இருந்ததாக 1993 ஆம் ஆண்டைய அஸோஸியேடட் பிரஸ் ரிப்போர்ட் தெரிவிக்கின்றது)

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் வீட்டோடு மட்டுமல்ல படுக்கையோடும் முடங்கிவிட்ட இந்த அபலைப்பெண் முதன்முதலாக 2700 மைல்கள்; பயணித்து சிகிச்சைக்காக மும்பைக்கு இன்னும் 10 தினங்களில் வரவுள்ளார் ஆனால் அத்தனை எளிதாகவல்ல!

மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற உடற்பருமன் மற்றும் செரிமான அறுவை சிகிச்சை (Obesity & Digestive Surgery) டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா (Mufazzal Lakdawala) அவர்கள் சிகிச்சையளிக்க முன்வந்ததை அடுத்து இந்திய விசா பெற முயற்சி மேற்கொண்டவருக்கு தூதரக விதிமுறைகள் குறுக்கே வந்ததை தொடர்ந்து டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலே அவர்களே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை தொடர்பு கொண்டு மெடிக்கல் விசா பெற உதவினார்.

அடுத்த பிரச்சனை விமானம், சாதாரண ஆம்புலன்ஸ் விமானங்களில் அவரை கொண்டுவர இயலாது என்பதால் அவருக்கென தனி சிறப்பு விமானத்தில் சுமார் 6 இருக்கைகளை அகற்றி ஸ்ட்ரெச்சரில் தான் கொண்டு வர முடியுமென்பதால் இதற்கு மட்டும் சுமார் 1 மில்லியன் திர்ஹம் செலவாகுமாம். மேலும், அவரை படுக்கையறையிலிருந்து வெளியே கொண்டுவர வீட்டின் சுவரையும் இடிக்க வேண்டும். சிகிச்சைக்குப்பின்னும் சில மாதங்கள் டாக்டரின் தொடர் கண்காணிப்பில் மும்பையிலேயே இருக்க வேண்டும்.

இதுவரை 300 கிலோ எடையுள்ளவர்கள் வரை சிகிச்சையளித்துள்ள டாக்டர் முபஸ்ஸல் லக்டவாலா அவர்கள் இந்த சிகிச்சை குறித்து கூறும் போது, நிச்சயமாக எனக்கும் எனது குழுவுக்கும் மிகவும் சவாலானது என்றாலும் இறைவன் எனக்கு வழங்கியுள்ள மருத்துவ அறிவை கொண்டு இயன்றளவு சிகிச்சையில் வெற்றிபெற முயற்சி செய்வேன் எனக்கூறினார். இவரிடம் சிகிச்சை பெற்ற பிரபலங்களில் இன்றைய 2 மத்திய மந்திரிகளும் அடக்கம்.

ஈமான் அஹ்மது அப்துல் அதீ குறித்து ஏற்கனவே அதிரை நியூஸில் வெளிவந்த செய்தியை வாசிக்க கீழ்க்காணும் சுட்டிக்குள் செல்லவும்

25 வருடங்களாக வீட்டை விட்டு வெளியே வராத உலகிலேயே குண்டான பெண்!

ஈமான் அஹ்மது அப்துல் அதீ அவர்களின் சிகிச்சை வெற்றிபெறவும், நலம்பெற்று வாழவும் பிரார்த்திப்போம். நம்மை எல்லாம் இதுபோன்ற சோதனைகள் இன்றி வாழ அனுமதித்துள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்போம், இன்ஷா அல்லாஹ் வாழ்க்கையையே வணக்கமாக்கி கொள்வோமாக!

Source: Gulf News


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.