என்னை கவர்ந்த திரு குர்ஆன் - ஸ்ரீலங்கா பொது பல சேனாவின் டிலந்த விதானகே.தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தை படித்தேன் அது ஒரு சிறந்த மொழியாக்கமாகும். - பொது பல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே.

"கிதுல்கல" என்ற இடத்திற்கு பயணம் சென்று வரும் வழியில் தவ்ஹீத் ஜமாஅத்தின் குர்ஆன் மொழியாக்கத்தை படித்தேன். அது ஒரு சிறந்த மொழியாக்கமாகும். என பொது பல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டு உள்ளார்.

ஹழால் பிரச்சினையின் போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளருடன் அப்போதைய ஆளும் கட்சி பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை நாம் சந்தித்து பேசினோம். அது போல் அப்போதைய எதிர்கட்சி தலைவர் ரனில் தலைமையில் எதிர்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து பேசினோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நாம் சந்தித்து பேசியதில் குர்ஆன் பற்றிய போதிய ஞானம் அவர்களுக்கு இல்லை என்பதை புரிந்து கொண்டோம். அதனை அவர்களும் உளப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்கள்.

என்ன பிரச்சினைகள் இருந்தாலும் முஸ்லிம்களுடனான எனது தொடர்புகள் சுமுகமாகவே இருக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பரப்பும் பொது பல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலந்த விதானகே தற்போது குர்ஆன் படிக்க ஆரம்பித்துள்ளமை ஒரு சிறந்த அடுத்த கட்ட நகர்வாகும்.

இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மற்றும் குர்ஆன் மீதும் பொது பல சேனாவினால் முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்குறிய பதில்கள் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள குர்ஆன் மொழியாக்கத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 500க்கும் அதிகமான விளக்கக் குறிப்புகள் அடங்கிய குறித்த குர்ஆன் மொழிபெயர்ப்பு கடந்த வருடம் கொழும்பில் தவ்ஹீத் ஜமாஅத்தினால் வெளியிடப்பட்டது.

குர்ஆன் பற்றி விளக்கம் கேட்டு பொது பல சேனாவினால் ஜம்மிய்யதுல் உலமாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்திற்க்கு விளக்கமளிக்க வேண்டிய உலமா சபையினர் கடிதம் தலைவருக்கா, செயலாளருக்கா, பொருளாலருக்கா என்று தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறி கடிதத்திற்க்கு பதிலளிக்காமல் இருப்பதற்காக சாக்குப் போக்குகளின் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

குர்ஆன் மொழியாக்க வெளியீட்டு நிகழ்வை தடை செய்ய ஜம்மிய்யதுல் உலமா சபையினரும், அஸாத் ஸாலி என்கிற கப்ரு வணங்கியும் பெரும் முயற்ச்சிகளை செய்தார்கள். முஸ்லிம் பெயர் தாங்கிகளான இவர்கள் குர்ஆன் வெளியீட்டை தடுக்க நினைக்கும் போது இனவாத அமைப்பான பொது பல சேனாவின் முக்கியஸ்தரான டிலந்த விதானகே போன்றவர்கள் குர்ஆனை பாராட்டுவது இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் சிங்கள குர்ஆன் மொழிபெயர்ப்பை மாற்று மத நண்பர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். குறித்த குர்ஆன் மொழிபெயர்பை பெற்றுக் கொள்ள விரும்பும் மாற்று மத சகோதரர்களை 0112677974 எனும்  இலக்கத்தை தொடர்பு கொண்டு குர்ஆனை பெற்றுக் கொள்ள சொல்வோமாக!

-ஸரூக் அப்துல் லத்திப் - தாராபுரம், மன்னார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.