அ.தி.மு.க வை மிரட்டும் பாஜக - என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்பா.ஜ.க கட்சி அ.தி.மு.க வை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டு இருக்கிறது அதில் ஒன்று தான் ஐ.டி ரெய்டு.

தமிழகத்திலே ஆளும் கட்சியான அ.தி.மு.க தான் ஊழல் செய்கிறார்கள் மற்ற கட்சிகளெல்லாம் ஊழல் செய்யவில்லையா என்றால் செய்யதான் செய்கிறார்கள் ஆனால், இப்பொழுது பா.ஜ.க கட்சிக்கு தேவை அ.தி.மு.க வின் 49 எம்.பி க்கள் தான். அதற்காகத்தான் இந்த ஐ.டி ரெய்டுகளெல்லாம் நடைபெறுகின்றது.

ஏன் இந்தியாவிலே வேறு எந்த மாநிலத்திலையும் ஊழல் நடைபெறவில்லையா, கருப்பு பணபதுக்கள் நடைபெறவில்லையா என்று பார்த்தால் நடைபெறத்தான் செய்கிறது ஆனால் அவர்களுக்கெல்லாம் ஐ.டி ரெய்டு கிடையாது ஏனென்றால் அந்த மாநிலங்கெல்லாம் பா.ஜ.க ஆளக்கூடிய மாநிலங்களாகத்தான் இருக்கும்.

ஏன் பணம் அதிகமாக புழங்கக்கூடிய குஜராத்திலே ஐ.டி ரெய்டுநடத்த வேண்டியது தானே அங்கே எல்லாம் ஊழல் நடை பெறவில்லையா ?

திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய ஐ.டி ரெய்டு தான் தமிழகத்தில் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

தமிழக ஆட்சியாளர்களை பா.ஜ.க தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடத்துகின்ற ஒரு நாடகம் தான் இந்த ஐ.டி ரெய்டு.

மக்களே நாம் சிந்தித்து தெளிவு பெற வேண்டும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.