ஜெ. இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே மோடி இரங்கல் தெரிவித்தது ஏன்?: விஜயதரணிமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக இரவு 11.30 மணிக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் 11.09 மணிக்கே இரங்கல் தெரிவித்தது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள். அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆனால் பிரதமர் 11.09 மணிக்கே ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதை பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது.

மோடி ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழில் அவர் இரவு 11.30 மணிக்கு இறந்ததாக கூறும்போது பிரதமர் மட்டும் இரவு 11.09 மணிக்கே ஏன் இரங்கல் தெரிவித்தார். இந்த மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளது என நினைக்கிறேன்.

 வீடியோ ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்கள் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் சிகிச்சை பெற்ற புகைப்படங்களோ, வீடியோக்களோ வெளியிடவில்லை. சந்தேகங்களை போக்க அதிமுகவோ அல்லது மாநில அரசோ புகைப்படங்கள் அல்லது வீடியோவை வெளியிட வேண்டும்.

ஆளுநர்
ஆளுநர் அப்பல்லோ மருத்துவமனைக்கு பல முறை சென்றும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. ஒரு மாநில முதல்வர் இறப்பதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பே பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். மக்களிடம் உண்மையை கூற வேண்டும்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.